ayodhya ram temple Idol Features: அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டிருக்கும் ராமர் கோயிலின் திறப்பு விழா கோலாலகமாக நடைபெற இருக்கும் நிலையில், கோயில் கருவறையில் நிறுவப்பட்டிருக்கும் பால ராமர் சிலை குறித்த சிறப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. ராமர் கோயிலுக்கு கடந்த 2020ஆம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அயோத்தி ராமர் கோயிலை ஸ்ரீ ராம ஜென்ம புமி தீர்த்த ஷேஷ்த்ரா அதிகாரிகள் நிர்வகிக்க உள்ளனர். இந்த கோயில், கிட்டத்தட்ட 2.7 ஏக்கர் அளவிற்கு கட்டப்பட்டுள்ளது. அதாவது, 380 அடி, 250 அகலம், 161 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோயில் மூன்று மாடி கட்டிடமாக கட்டப்பட்டுள்ளது. ஒரு மாடியின் தரைக்கும் அடுத்த மாடிக்கும் 20 அடி உயரம் என கோயிலின் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அயோத்தி பால ராமர் சிலையின் சிறப்புகள்
* அயோத்தி ராமர் கோயிலில் இருக்கும் சிலையானது, இந்தியாவிலேயே மிகப்பெரிய பால ராமர் சிலையாகும். இந்த சிலையின் வடிவமைப்பு மிகவும் அழகாகவும், நேர்த்தியாகவும் உள்ளது.
* அயோத்தி ராமர் கோயிலில் இருக்கும் சிலை வடிவமைக்கப்பட்டுள்ள கல்லின் பெயர் கிருஷ்ண ஷிலா. இது கர்நாடகாவின் மைசூரு மாவட்டத்தில் உள்ள எச்டி கோட் தாலுகாவில் உள்ள புஜ்ஜேகவுடனபுரா கிராமத்தில் உள்ள பாறையில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு பல டன் எடை கொண்ட ஒற்றை கல்லில் இருந்து 200 கிலோ எடையுடன் கலைநுட்பத்துடன் சிலை செதுக்கப்பட்டுள்ளது. இந்த சிலைக்கு தொடர்ந்து தண்ணீர், பால் அபிஷேகம் செய்தாலும் எந்த பிரச்சனையும் ஏற்படாது.
மேலும் படிக்க | ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்து கொள்ளும் நித்தியானந்தா! அவரே வெளியிட்ட பதிவு!
* அயோத்தி ராமர் கோயிலில் இருக்கும் சிலை ராமர் விஷ்ணுவின் அவதாரமாக உள்ளார். இந்நிலையில் தான் ராமர் சிலையை சுற்றி விஷ்ணுவின் 10 அவதார வடிவங்கள் சிற்பமாக இடம்பெற்றுள்ளது. மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மம், வாமனம்,பரசுராமர், ராமர், கண்ணன், புத்தர், கல்கி ஆகிய தசாவதாரங்கள் சிற்பங்களாக உள்ளன. அதுமட்டுமின்றி பிரம்மனும், ருத்திரனும் இரண்டு பக்கமும் சிற்பங்களாக செதுக்கப்படுள்ளன. ஒரு பக்கம் அனுமனும் மற்றொரு பக்கம் கருடனும் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன.
* ராமர் சிலையை சுற்றிய அலங்காரத்தில் சங்கு, சக்கரம், தாமரை, கதை, பிரணவம், சுவத்திகம், போன்ற சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. சிலையின் கீழ் பகுதியில் நவகிரங்களான சூரியன், புதன், சுக்கிரன், குரு, ராகு கேது, வெள்ளி, சந்திரன், செவ்வாய், சனி உள்ளிட்டவற்றின் சிற்பங்கள் உள்ளன.
* இந்த சிலையின் மீது ஒவ்வொரு ஆண்டின் ராமநவமி தினத்தில் சூரியஒளி விழுவது போன்று வடிமைக்கப்பட்டுள்ளது. ராமநவமி தினத்தில் மதியம் 12 மணிக்கு சூரிய ஒளி நேரடியாக ராமரின் நெற்றியின் விழும்படி கோவில் கருவறை வடிவமைக்கப்பட்டுள்ளது.
* இந்த கோயில் 392 தூண்களும், 44 கதவுகளும் உள்ளது. மேலும், 5 மண்டாங்கள், ஒரு ஹால் ஆகியவை உள்ளதாம். இந்த கோயிலின் கிழக்கு திசையில் நுழையும் பக்தர்கள், 32 படிகள் ஏறி கோயிலுக்குள் நுழைய வேண்டுமாம். இதில், வயது முதிந்தவர்களுக்கும் மாற்று திறனாளிகளுக்கும் லிஃப்ட் மற்றும் ராம்ப் இருப்பதாக கோயில் நிர்வாகத்தினர் கூறுகின்றனர். இந்த கோயிலில் ஒரு இடத்தில் கூட இரும்பு உபயோகிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
மேலும் படிக்க | அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா: இந்தியாவில் நடக்கும் முக்கிய மாற்றங்கள்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ