தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது மிளகாய் தூள் வீசி தாக்குதல்

தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 20, 2018, 04:18 PM IST
தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது மிளகாய் தூள் வீசி தாக்குதல் title=

இன்று செவ்வாய்க்கிழமை, டெல்லி தலைமை செயலகத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது மிளகாய் தூள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால் அதிர்ஷ்டவசமாக அவருக்கு பெரும் சேதம் எதுவும் ஏற்ப்படவில்லை.

இன்று மதியம் உணவு அருந்திவிட்டு டெல்லி தலைமை செயலகத்தில் வந்தார். அப்பொழுது நடுத்தர வயதான ஒருவர் அவருக்கு வணக்கம் செலுத்தினார். உங்களுடைய குறை என்ன என்று தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கேட்க முற்ப்பட, அடுத்த விநாடிக்குள் அந்த நபர் முதலமைச்சர் மீது மிளகாய் தூள் தூக்கியெறிந்தார்.

அந்த நபரின் ஒரு கையை பிடித்துக்கொண்டு தடுத்தார். அப்பொழுது முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அணிந்திருந்த கண்ணாடி கீழே விழுந்தது. இதனால் அந்த நபர் மற்றொரு கையில் இருந்த மிளகாய் தூளை முதல்வர் மீது வீசினான்.

அங்கிருந்த காவல்துறையினர் அந்த நபரை கைது செய்து சிறையில் அடைந்துள்ளனர். அவரிடம் விசாரணை செய்து வருகின்றனர். ஆனால் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது எதற்காக மிளகாய் தூள் வீசினார் என்று இதுவரை காரணம் தெரியவில்லை.

டெல்லி முதல் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு z-பிளஸ் பாதுகாப்பு மற்றும் அவரை சுற்றி 25 போலீஸ்காரர்கள் நின்றிருந்தும், இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தி உள்ளது.

Trending News