கொரோனா தாக்கம் மற்றும் உக்ரைன் போர் காரணமாக ஏற்பட்டுள்ள சர்வதேச பொருளாதார மந்த நிலையில், அமெரிக்கா உட்பட உலக நாடுகளில் கச்சா எண்ணெய் தேவை படிப்படியாகக் குறைந்து வந்ததோடு மட்டும் அல்லாமல் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 120 டாலரில் இருந்து 90 டாலர் வரையில் குறைந்தது. எனவே, OPEC அமைப்பு கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருமானம் பெற வேண்டும் என்ற நோக்கில், கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைப்பதாக அறிவித்தது.
இந்தியாவிற்கும் இது பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய செய்தியாகும். ஏனெனில் எண்ணெய் விலைகள் குறைந்து வந்தததை அடுத்து, இறக்குமதி செலவு குறைந்ததால், அரசுக்கு சொந்தமான எரிபொருள் விநியோக நிறுவனங்கள், பெட்ரோல் மற்றும் டீசல் விற்னையில் ஏற்படும் இழப்புகள் குறைவாக இருந்தன.
OPEC அமைப்பின் முடிவுக்கு முன்னர், எண்ணெய் நிறுவனங்கள் டீசல் விற்னையில் கணிசமான இழப்பை சந்தித்தன. லிட்டருக்கு சுமார் ரூ. 30 என்ற அளவில் எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்படுகிறது. ஆனால் இப்போது பெட்ரோலில் சிறிய அளவில் மட்டுமே இழப்பு ஏற்படுகிறது. கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி ஆகியவை டீசல் மற்றும் பெட்ரோல் இறக்குமதி சுமையை அதிகரிக்க வழிவகுக்கும்.
மேலும் படிக்க | அதிர்ச்சி கொடுத்த RBI; மீண்டும் உயரும் ரெப்போ விகிதத்தால் EMI அதிகரிக்கும்!
இந்தியா தனது எண்ணெய் தேவைகளில் 85% இறக்குமதி செய்கிறது. எனவே உள்நாட்டு எண்ணெய் விலைகளில், உலக அளவில் எண்ணெய் விலைகள் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. பணவீக்கத்தை கட்டுப்படுத்த அரசுக்கு உதவும் நோக்கில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC), பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (BPCL), ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) உள்ளிட்ட சில அரசுக்கு சொந்தமான எரிபொருள் சில்லறை விற்பனையாளர்கள், பெட்ரோல் மற்றும் டீசலின் சில்லறை விற்பனை விலையை சர்வதேச விலைக்கு ஏற்ப மாற்றியுள்ளனர்.
கொரோனா பொது முடக்கத்தின் விளைவாக, நிறுவனங்கள் மே மற்றும் ஜூன் முழுவதும் எரிபொருள் விற்பனையில் நஷ்டத்தை பதிவு செய்தன. எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 120 அமெரிக்க டாலர்கள் என்ற வரலாறு காணாத உயர்வை எட்டியது. பின்னர் ஆகஸ்ட் மாதத்தில் விலை குறையத் தொடங்கியது.
இந்தியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்கள் இந்த விலைகள் குறைந்ததன் விளைவாக ஏப்ரல் மாதத்தில் இருந்து தாங்கள் அடைந்த இழப்பை மீட்டெடுக்கும் என்று நம்பிய நிலையில், இப்போது நிலைமை வேறாக உள்ளது. இருப்பினும், பெட்ரோல் மற்றும் டீசலின் சில்லறை விலையை ஐஓசி, பிபிசிஎல் மற்றும் எச்பிசிஎல் ஆகியவை விலைக்கு ஏற்ப தினசரி மாற்றியமைக்க வேண்டும். ஆனால் நவம்பர் 4, 2021 முதல், கடந்த 137 நாட்ககளாக கட்டணங்களை அதிகரிக்கவில்லை. இந்த நிலை மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய முக்கிய இந்திய நகரங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை:
மும்பை - மும்பையில் கடந்த சில நாட்களாக டீசல் மற்றும் பெட்ரோல் விலையில் மாற்றம் இல்லை. மும்பையில் பெட்ரோல் விலை 106.29 ரூபாயாக உள்ளது. டீசல் விலை தற்போது 94.25 ரூபாயாக உள்ளது.
டெல்லி - டெல்லியில் தற்போது பெட்ரோல் விலை 96.76 ரூபாயாகவும், டெல்லியில் டீசல் விலை 89.66 ரூபாயாகவும் உள்ளது.
பெங்களூரு - பெங்களூரில் பெட்ரோல் விலை சமீபகாலமாக பெரிதாக மாறவில்லை; தற்போதைய விலை 101.92. இதனிடையே, பெங்களூரு டீசல் விலை இன்னும் 87.87 ஆக உள்ளது.
ஹைதராபாத் - ஐதராபாத்தில் பெட்ரோல் விலை இன்னும் 109.64 ஆகவும், டீசல் விலை 97.8 ஆகவும் உள்ளது.
சென்னை: சென்னையில் பெட்ரோல் விலை ரூ.102.62. இதேபோல், சென்னையில் டீசல் விலை 94.22 ஆக உள்ளது.
கொல்கத்தா - கொல்கத்தாவில் பெட்ரோல் விலை மாறாமல் 106.01 ஆக உள்ளது, அதே சமயம் கொல்கத்தாவில் டீசல் விலையும் அப்படியே மாறாமல் ரூ 92.74 என்ற அளவில் உள்ளது.
மேலும் படிக்க | வீழ்ச்சி காணும் கச்சா எண்ணெய் விலைகள்; பெட்ரோல்-டீசல் விலையும் குறையுமா..!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ