பிரதமர் மோடி குறித்த இம்ரான் கானின் கருத்து காங்., கட்சியின் சூழ்ச்சி: நிர்மலா சீதாராமன்

பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவது குறித்து பாகிஸ்தான் அதிபர் இம்ரான் கான் கூறிய கருத்து காங்கிரஸ் கட்சியின் சூழ்ச்சி தான் என நிர்மலா சீதாராமன் குற்றசாட்டு!!

Last Updated : Apr 17, 2019, 10:49 AM IST
பிரதமர் மோடி குறித்த இம்ரான் கானின் கருத்து காங்., கட்சியின் சூழ்ச்சி: நிர்மலா சீதாராமன் title=

பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவது குறித்து பாகிஸ்தான் அதிபர் இம்ரான் கான் கூறிய கருத்து காங்கிரஸ் கட்சியின் சூழ்ச்சி தான் என நிர்மலா சீதாராமன் குற்றசாட்டு!!

பாகிஸ்தானின் பாலக்கோட் பகுதியில் தீவிரவாதப் பயிற்சி முகாம்கள் மீது இந்திய விமானப்படையினர் தாக்குதல் நடத்தியதில் தீவிரவாதிகள் முகாம் அளிக்கப்படவில்லை என பாக்கிஸ்தான் தெரிவித்திருந்தது. இந்திய விமானப்படை தாக்குதலில் பயங்கரவாத முகாம் அளிக்கபட்டது என்பதை நிரூபிப்பதாக பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ANI செய்தி நிறுவனத்திடம் அளித்த பேட்டியின்போது கூறுகையில், இஸ்லாமாபாத் பதிலாக தாக்கப்பட்ட பயங்கரவாத பயிற்சி மையம் பிப்ரவரி 26 ஆம் தேதி அன்று இந்திய விமானப் படையால் அளிக்கப்பட்டது உண்மை என தெரிவித்துள்ளார். 

மேலும், இந்தியாவில் நடைபெறும் பாராளுமன்றத் தேர்தலில், பாஜக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியமைத்தால், காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கான, அமைதி பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு உள்ளது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கருத்து தெரிவித்திருந்தார். பிரதமர் மோடிக்கு ஆதரவாக இம்ரான் கான் பேசியிருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வந்தன. இதுப்போன்ற கருத்துகள் ஏன் பரவுகின்றன என தெரியவில்லை. பிரதமர் மோடியை எப்படியாவது வெளியேற்ற வேண்டும் என்கிற எண்ணத்துடன் செயல்படும் காங்கிரசின் முக்கிய தலைவர்கள், பாகிஸ்தான் சென்று இம்ரான் கானை சந்தித்து  திட்டம் தீட்டி வருகின்றனர். 

அதேபோல் இம்ரான் கானின் இந்த கருத்துக்கும் காங்கிரசின் சூழ்ச்சியே காரணமாகும். இப்படி செய்வதால் என்ன தான் நடந்துவிடப்போகிறது என புரியவில்லை என அவர் தெரிவித்தார்.

மேலும், அவர் கூஒருகையில், இந்தியாவின் தாக்குதலில் பாக்கிஸ்தான் அவர்கள் வெற்றி பெறவில்லை மற்றும் பலர் கொல்லப்படவில்லை எனக் காட்டியது, ஒரு சிறிய குழு பத்திரிகையாளர்கள் மற்றும் பாதுகாப்புடன் இணைந்ததற்கு அவர்கள் 40 நாட்கள் எடுத்தார்கள், அவர்கள் அந்த மக்களால் மட்டுமே அந்த மிடாசாவுக்கு மத்ரஸாவின் அடிவாரத்தின் கீழும், மத்ரஸாவின் பின்னால், அடர்த்தியான காட்டில் பயிற்சி முகாம் இருந்தது என்பதை நான் கூறுகிறேன். எனவே பாக்கிஸ்தான் தன்னை ஒரு பரிகாசம் செய்து கொண்டிருக்கிறது "என்று அவர் கூறினார்.

பாலக்கோட் வான்வழி தாக்குதலின் முடிவைப் பற்றி இந்திய அரசாங்கம் மௌனத்தை நிலைநிறுத்தியது பற்றி கேள்வி எழுப்பிய போது, ​​பாதுகாப்புத்துறை அமைச்சர், "தாக்குதலுக்கு முன்னதாக, பல பாக்கிஸ்தானிய வலைத்தளங்கள் இலக்கு பயங்கரவாத முகாம் இளைஞர்களை நியமித்துள்ளதாகக் கூறின." 

 

Trending News