CAA போராட்டக்காரர்களால் தாக்கப்பட்ட ZEE NEWS குழு; கேமராவும் உடைக்கப்பட்டது

CAA சட்டத்துக்கு எதிராக போராடி வரும் ஆர்ப்பாட்டக்காரர்கள் சுக்தேவ் விஹாரில் ZEE NEWS குழுவைத் தாக்கி கேமராவையும் உடைத்தனர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 30, 2020, 08:27 PM IST
CAA போராட்டக்காரர்களால் தாக்கப்பட்ட ZEE NEWS குழு; கேமராவும் உடைக்கப்பட்டது title=

புதுடில்லி: CAA சட்டத்துக்கு எதிராக போராடி வரும் ஆர்ப்பாட்டக்காரர்கள் சுக்தேவ் விஹாரில் ZEE NEWS குழுவைத் தாக்கி உள்ளனர். ZEE NEWS நிருபர்களான ஜிதேந்திர சர்மா மற்றும் நீரஜ் கவுர் ஆகியோரை போராட்டக்காரர்கள் சரமாரியாக தாக்கினர். CAAவுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள் தாக்கப்பட்டது குறித்து ZEE NEWS குழு எதிர்ப்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முயன்றபோது, அவர்கள் செய்தியாளர்களிடம் ஆவேசமாக நடந்து கொண்டதுடன், அவர்களை தாக்கி கேமராவையும் உடைத்தனர். இந்த சம்பவம் மீடியா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதேபோல இன்று CAA ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில், ஜாமியா பகுதியில் ஒரு இளைஞர் துப்பாக்கிச் சூடு நடத்தினார். அதாவது குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜாமியா மாணவர்கள் டெல்லியில் ஒரு அணிவகுப்புக்கு ஏற்பாடு செய்தனர். CAA-வுக்கு எதிராக கோசங்கள் எழுப்பட்டு ஜாமியா மாணவர்களின் அணிவகுப்பு ராஜ்காட் வரை சென்று கொண்டிருந்தது. ஆனால் இந்த அணிவகுப்பை காவல்துறை அனுமதிக்கவில்லை.

"ஹோலி பேமலி" மருத்துவமனைக்கு அருகே போலீசார் அதிக அளவில் தடுப்பு காவல் அமைத்து நிறுத்தப்பட்டிருந்தனர். இந்த அணிவகுப்பை கைவிடுமாறு ஆர்ப்பாட்டங்காரர்களுடன் காவல் துறையினர் பேசிக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் கூட்டத்திற்குள் நுழைந்த அந்த இளைஞர் போராட்டக்காரர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினான். அப்போது ஜாமியாவின் மாணவர் சதாப் மீது குண்டு பட்டது. உடனடியாக காயம் அடைந்த மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இந்த துப்பாக்கி சூடு நடத்தியவரை போலீசார் கைது செய்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர் குறித்த முதற்கட்ட தகவல்களின்படி, குற்றம் சாட்டப்பட்டவர் மைனர் மற்றும் அவரது வயது 17. குற்றம் சாட்டப்பட்டவரின் ஆதார் அட்டை படி, அவரது பெயர் கோபால் சர்மா. அவர் தேசிய தலைநகரின் என்சிஆர் பகுதியான நொய்டாவில் உள்ள கவுதம் புத் நகரில் வசிப்பவர். அவரின் தந்தைக்கு வெத்தலை-பாக்கு கடை வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. 

ஜாமியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த காயம் அடைந்த மாணவர் ஷாதாப் மாஸ் கம்யூனிகேஷன் படித்து வருகிறார். துப்பாக்கி சூட்டுக்கு உள்ளான ஷாதாப்பின் இடது கையில் ஒரு புல்லட் இருப்பதாகவும், ஆனால் அவர் ஆபத்தான நிலையில் இல்லை என்றும் டி.சி.பி சின்மோய் பிஸ்வால் கூறுகிறார். துப்பாக்கிச் சூடு நடத்தியவரிடம் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். 

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Trending News