இந்தியா சீனா எல்லையில் பதற்றம் நிலவுவதை அடுத்து, இந்திய விமானப்படை சி -17, இலியுஷின் -76 மற்றும் சி -130J சூப்பர் ஹெர்குலஸ் ஆகிய போர் விமானங்கள் லே வான்வெளியில் ரோந்து பணிகளை மேற்கொள்கின்றன. இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றங்களுக்கு மத்தியில், இந்த போர் விமானங்கள் தொடர்ந்து இரவும் பகலும் ரோந்து செல்கின்றன.
கிழக்கு லடாக்கில் (Ladakh) எந்தவொரு சூழ்நிலையையும் சமாளிக்க இந்தியா முழுமையாக தயாராக உள்ளது. லடாக் செக்டாரில், இந்திய இராணுவமும் விமானப்படையும் இரவும் பகலும் விழிப்புடன் இருந்து எதிரிகளை கண்காணிக்கின்றனர். ராணுவமும் விமான படையும், சீன இராணுவத்திற்கு எதிராக கூட்டாகப் போரிடத் தயாராகி வருகின்றன.
மேலும் படிக்க | Gilgit-Baltistan வரலாறும், பாகிஸ்தான் எடுத்துள்ள தற்கொலை முடிவும் ..!!!
நிலைநிறுத்தப்பட்ட துருப்புக்களுக்கு தேவையான சாதனங்கள் மற்றும் ரேஷன் பொருட்களும் அதிக அளவில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன.
லடாக் பிராந்தியத்தில் பணியில் இராணுவம் மற்றும் பிற பாதுகாப்பு படையினரின் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்படும் என்பதற்கான தெளிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தற்போது முப்படைகளின் தலைவரான ஜெனரல் பிபின் ராவத் மற்றும் இராணுவம் மற்றும் விமான படைகளின் தலைவர்கள், சீன இராணுவத்திற்கு எதிராக அடிக்கடி விவாதித்து நடவடிக்கை எடுக்க திட்டமிட்டு வருகின்றனர் என்றும் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன
லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில், ஜூன் மாதம் நடந்த வன்முறை மோதலில், 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதில் இருந்து தொடங்கிய பதற்றம் இன்னும் தணியவில்லை.
ஆனால், இந்திய ராணுவம் முக்கியமான பகுதிகளில், ராணுவ ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த உயரமான பகுதிகளை தனது கட்டுபாட்டில் வைத்துக் கொண்டு ஆதிக்கம் செலுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | அதிபர் ட்ரம்ப் ஆபத்தான நிலையில் உள்ளாரா... வெள்ளை மாளிகை கூறுவது என்ன..!!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR