ஆந்திரா மாநிலத்தில் பன்றி காய்ச்சலால் இதுவரை 10 பேர் பலி!

ஆந்திரா மாநிலத்தில் பன்றி காய்ச்சலால் பலியானவர்களின் எண்ணிக்கை 10-ஆக உயர்ந்துள்ளது!

Last Updated : Oct 23, 2018, 03:46 PM IST
ஆந்திரா மாநிலத்தில் பன்றி காய்ச்சலால் இதுவரை 10 பேர் பலி! title=

அனந்த்பூர்: ஆந்திரா மாநிலத்தில் பன்றி காய்ச்சலால் பலியானவர்களின் எண்ணிக்கை 10-ஆக உயர்ந்துள்ளது!

ஆந்திர மாநிலம் கர்னூல் மத்திய பொது மருத்துவமனையில் நேற்று 2 பேர் பன்றி காய்சல் தாக்கி உயிர் இழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதன் மூலம் ஆந்திராவில் பன்றி காய்ச்சல் தாக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 10-ஆக அதிகரித்துள்ளது. இதனையடுத்து பொதுமக்களுக்கு பன்றி காய்ச்சல் எச்சரிக்கை மணி விடுக்கப்பட்டுள்ளது.

கர்னூல் பொது மருத்துவமனையில் மட்டும் இதற்கு முன்னதாக 6 பேர் பன்றி காய்ச்சில் தாக்கி பலியாகியுள்ளதாகவும், கடந்த திங்கள் அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த கர்ப்பிணி பெண் ஒருவரும் முதியவர் ஒருவரும் பலியாகியுள்ளனர். இவர்கள் இருவரும் பன்றி காய்ச்சல் தாக்கி பாலியானதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கூடுதல் மாவட்ட மருத்துவ மற்றும் சுகாதார அலுவலர் டாக்டர் சரஸ்வதி தேவி தெரிவிக்கையில் இதுவரை 13 நோயாளிகளுக்கு பன்றி காய்ச்சல் இருப்பது உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அனந்த்பூர் மற்றும் கடப்பா பகுதிகளில் பன்றி காய்ச்சல் எச்சரிக்கை மணி ஒலிக்கப்பட்டுள்ளது. அன்ந்த்பூர் மற்றும் கடப்பா மண்டலங்களில் உள்ள மருத்துவ அதிகாரிகளுக்கு பன்றி காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் ஏற்பாடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பன்றி காய்ச்சல் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவிக்கப்பட்டள்ளது எனவும் சரஸ்வதி தேவி தெரிவித்ததுள்ளார்.

Trending News