சர்வரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் 137 விமானங்கள் இன்று காலதாமதமுடன் இயங்குகிறது.
ஏர் இந்தியா விமான நிறுவன குழுமம் நாளொன்றுக்கு சராசரியாக 674 விமானங்களை இயக்குகிறது. சர்வதேச அளவிலான இந்த விமான சேவையானது நேற்று பாதிப்படைந்தது. ஏர் இந்தியாவின் பயணிகள் சேவைக்கான கம்ப்யூட்டர் சாப்ட்வேரில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டத்தில் சுமார் 6 மணிநேரம் வரை விமான சேவை நேற்று முடங்கியது. இதனால் நேற்று 149 விமானங்கள் காலதாமதமுடன் இயங்கின.
இந்த நிலையில், ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் செய்தி தொடர்பு அதிகாரி ஒருவர் கூறும்பொழுது, சாப்ட்வேர் கோளாறால் இன்றும் விமான சேவை பாதிக்கப்படும். இதனால் 137 விமானங்கள் 197 நிமிடங்கள் வரை காலதாமதமுடன் இயங்கும் என தெரிவித்து உள்ளார்.