விபத்தில் இருந்து தப்பிய விஜயவாடா-மும்பை Air India விமானம்!

மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம் நிலைதடுமாறியதில் பயணிகள் பீதியடைந்தனர்!

Last Updated : Jul 10, 2018, 07:48 PM IST
விபத்தில் இருந்து தப்பிய விஜயவாடா-மும்பை Air India விமானம்! title=

மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம் நிலைதடுமாறியதில் பயணிகள் பீதியடைந்தனர்!

விஜயவாடாவில் இருந்து மும்பை வந்தடைந்த ஏர் இந்தியா விமானம் இன்று பிற்பகள் 2.51 மணியளவில் மும்பை விமான நிலையத்தை எட்டியது. தரையிறக்கத்தின் போது விமான நிலையத்தில் ஓட்டப்பாதையில் நிலைதடுமாறிய IX213 விமானம், உள்ளிருந்த பயணிகளை பீதியால் ஆழ்த்தியது.

கடந்த சில வாரங்களாக மும்பையில் பொழிந்து வரும் தொடர் மழை காரணமாக ஓட்டப்பாதையில் ஏற்பட்ட சேதத்தின் காரணமாக இந்த தடுமாற்றம் நிகழ்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்தில் பயணிகளுக்கு ஏதும் அசம்பாவிதங்கள் நிகழவில்லை என ஏர் இந்தியா விமான நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக விபத்துக்குள்ளான விமானத்தின் நிலை குறித்து ஆராய ஏர் இந்தியா நிறுவனத்தின் நிபுனர் குழு விமானத்தை ஆராய்ந்ததாக ஏர் இந்தியா நிறுவன தலைமை நிர்வாக இயக்குனர் KS சுந்தர் தெரிவித்துள்ளார்.

மும்பை விமான நிலையத்தின் ஓட்டப்பாதையில் ஏற்பட்ட சேதத்தால் பாதிக்கப்பட்ட விமானமானது 27 அடிக்கு முன்னதாகவே தரையிறக்கப்பட்டதாக ஏர் இந்தியா செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

மும்பை மாநாகரில் கடந்த சில வாரங்களாக பொழிந்து வரும் தொடர்மழை காரணமாக மும்பைவாசிகளின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதித்துள்ளது. மேலும் முப்பை விமான நிலையத்தில் இருந்து புறப்படும் விமானங்கள் மற்றும் விமான நிலையத்திற்கு வரும் விமானங்கள் கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் காலதாமதமாகவே இயக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News