துவங்கியது 'AIIMS' மருத்துவ நுழைவுத்தேர்வு ஆன்-லைன் பதிவு!!

மத்திய அரசின் சுகாதார துறையின் நேரடி கட்டுப்பாட்டில் செயல்படும் எய்ம்ஸ் (AIIMS) கல்லூரிகளில் இளநிலை (UG) மற்றும் முதுநிலை (PG) மருத்துவ படிப்புகளில் சேர நுழைவுத் தேர்வு எழுத வேண்டும். அந்த வகையில் 2018-ன் நுழைவுத் தேர்வு மே 26, 27 நடைபெறுகிறது. 

Last Updated : Feb 5, 2018, 12:17 PM IST
துவங்கியது 'AIIMS'  மருத்துவ நுழைவுத்தேர்வு ஆன்-லைன் பதிவு!! title=

மத்திய அரசின் சுகாதார துறையின் நேரடி கட்டுப்பாட்டில் செயல்படும் எய்ம்ஸ் (AIIMS) கல்லூரிகளில் இளநிலை (UG) மற்றும் முதுநிலை (PG) மருத்துவ படிப்புகளில் சேர நுழைவுத் தேர்வு எழுத வேண்டும். அந்த வகையில் 2018-ன் நுழைவுத் தேர்வு மே 26, 27 நடைபெறுகிறது. 

அதற்கான ஆன்-லைன் விண்ணப்ப பதிவு இன்று தொடங்கியது. அடுத்த மாதம் மார்ச் 5 வரை ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம்.

நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு முதல் இணையதளம் வழியாக தேர்வு எழுதும் முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. 

இந்த நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் புதுடெல்லி, பாட்னா, புவனேஸ்வரம், குண்டூர் உள்பட 9 நகரங்களில் உள்ள கல்லூரிகளில் MBBS படிப்பில் சேரலாம்.

முக்கிய குறிப்புகள்:-

> ஆன்-லைன் விண்ணப்ப பதிவு இன்று

> மாதம் மார்ச் 5 வரை ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம்.

> அதிகாரப்பூர்வ வலைத்தளம் aiimsexams.org

Trending News