உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களை சேர்த்துக் கொள்ளுங்கள்...கல்லூரிகளுக்கு ஏஐசிடிஇ கடிதம்

தொழில்நுட்ப கல்வி நிலையங்களில் காலியாக உள்ள இடங்களில் உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட இந்திய மாணவர்களை சேர்த்துக் கொள்ள வேண்டுமென என அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் வேண்டுகோள் விடுத்துள்ளது. 

Written by - Chithira Rekha | Last Updated : Apr 12, 2022, 11:40 AM IST
  • உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களை சேர்க்க வேண்டும்
  • ஏஐசிடிஇ தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு கடிதம்
  • அதே ஆண்டை தொடர அனுமதிக்க உத்தரவு
உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களை சேர்த்துக் கொள்ளுங்கள்...கல்லூரிகளுக்கு ஏஐசிடிஇ கடிதம் title=

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததான் விளைவாக அங்கு உயர்கல்வி பயின்ற ஏராளமான இந்திய மாணவர்கள் நாடு திரும்பியுள்ளனர். அவர்கள் படிப்பைத் தொடர்வது கேள்விக்குறியாகி உள்ள நிலையில், உக்ரைனில் இருந்து திரும்பிய பொறியியல் மாணவர்களை காலியாக உள்ள இடங்களில் சேர்த்துக்கொள்ள வேண்டுமென அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (AICTE) கல்வி நிறுவனங்களை கேட்டுக்கொண்டுள்ளது. 

மேலும் படிக்க | பொறியியல் படிப்புகளுக்கு கணிதம் கட்டாயமில்லை. புதிய விதிகளை வெளியிட்ட ஏஐசிடிஇ

இது குறித்து அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் கல்வி நிறுவனங்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், போர் காரணமாக உக்ரைனில் இருந்து சுமார் 20 ஆயிரம் மருத்துவ மற்றும் தொழில்நுட்ப மாணவர்கள் கல்வி தொடர முடியாமல் தாயகம் திரும்பியுள்ளதாகவும், அவ்வாறு நாடு திரும்பிய மாணவர்களுக்கு பொறியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களை ஒதுக்கி உதவ வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளது. 

Indian Students Returned From Ukraine

உக்ரைனில் எந்த பாடப்பிரிவில், எந்த ஆண்டில் கல்வி பயின்றார்களோ அதையே இங்கேயும் தொடர அனுமதிக்க வேண்டும் எனவும் ஏஐசிடிஇ அறிவுறுத்தியுள்ளது. இதன் மூலம் உக்ரைன் போரால் கல்வி பாதிக்கப்பட்டு மன அழுத்தத்தில் இருக்கும் இந்திய மாணவர்கள் பயன் அடைவர் எனவும் ஏஐசிடிஇ கூறியுள்ளது. 

மேலும் படிக்க | உக்ரைன் மருத்துவ கல்லூரிகள் மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகளை தொடங்கியது!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News