மகாராஷ்டிராவில் விரைவில் புதிய அரசாங்கம்.. அமித் ஷாவை சந்தித்த ஃபட்னாவிஸ்

விரைவில் மாநிலத்தில் ஒரு புதிய அரசாங்கம் அமைக்கப்படும். அதை நான் முழுவதும் நம்புகிறேன் என்று முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் கூறியுள்ளார்.

Written by - Shiva Murugesan | Last Updated : Nov 4, 2019, 01:28 PM IST
மகாராஷ்டிராவில் விரைவில் புதிய அரசாங்கம்.. அமித் ஷாவை சந்தித்த ஃபட்னாவிஸ் title=

புதுடெல்லி: விரைவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு புதிய அரசு அமைக்கப்படும் என்று திட்டவட்டமாக கூறிய முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் (Devendra Fadnavis), இது தொடர்பாக வேறு எந்தக் கருத்தையும் தெரிவிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். அதாவது இன்று டெல்லியில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா-வை (Amit Shah) சந்தித்த பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய தேவேந்திர ஃபட்னாவிஸ், "மகாராஷ்டிரா மாநிலத்தில் வேறு எந்த அரசாங்கம் அமைப்பது குறித்து நான் எதுவும் கூற விரும்பவில்லை, விரைவில் மாநிலத்தில் ஒரு புதிய அரசாங்கம் அமைக்கப்படும். அதை நான் முழுவதும் நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.

முன்னதாக, முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ், பாஜக (Bharatiya Janata Party) தலைவர் அமித் ஷாவை டெல்லியில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் மகாராஷ்டிராவில் அரசாங்கம் அமைப்பது தொடர்பாக சிவசேனாவுக்கும் (Shiv Sena) பாஜகவுக்கும் இடையே நடந்து வரும் இழுபறி மற்றும் பேச்சுவாரத்தை பற்றியும், மாநிலத்தில் சிவசேனா மற்ற கட்சியின் ஆதரவுடம் ஆட்சி அமைக்க முயற்சி செய்து வருவது தொடர்பாகவும் ஆலோசனை செய்யப்பட்டது என ஊகிக்கப்படுகின்றன.

இருப்பினும், மகாராஷ்டிராவின் விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து மகாராஷ்டிரா முதல்வர் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் பேசியதாக கூறப்படுகிறது. பருவமழை பெய்யாத மழையால் பாதிக்கப்பட்ட மாநில விவசாயிகளுக்கு கூடுதல் உதவி வழங்கப்பட வேண்டும் என்று முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் கோரிக்கை வைத்துள்ளதகாவும் கூறப்படுகிறது.

Trending News