மேலாடை இன்றி நூதனப் போராட்டம் நடத்திய தெலுங்கு நடிகை!

தெலுங்கு நடிகைகளுக்கு எதிராக தெலுங்கு திரையுலகில் நடைப்பெற்று வரும் துஷ்பிரயோகங்களை குறித்து அப்படமாக வெளிக்கொண்டு வந்த ஸ்ரீ ரெட்டி இன்று அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார்!

Last Updated : Apr 7, 2018, 03:13 PM IST
மேலாடை இன்றி நூதனப் போராட்டம் நடத்திய தெலுங்கு நடிகை! title=

ஹைதராபாத்: தெலுங்கு நடிகைகளுக்கு எதிராக தெலுங்கு திரையுலகில் நடைப்பெற்று வரும் துஷ்பிரயோகங்களை குறித்து அப்படமாக வெளிக்கொண்டு வந்த ஸ்ரீ ரெட்டி இன்று அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார்!

முன்னதாக தெலுங்கு திரையுலகில் வாய்ப்பு கிடைக்க வேண்டுமெனில், நடிகைகள் தங்கள் கர்ப்பினை விலையாக கொடுக்க வேண்டியுள்ளது. தெலுங்கு திரையுலகில் திறமையான நடிகைகள் இருந்த போதிலும், மும்பையில் இருந்து நடிகைகள் கொண்டுவரப் படுவது என பல முறைகேடுகள் நடைப்பெற்று வருகிறது.

ஒருவேலை வாய்ப்பு கிடைத்தாலும், அவர்களுக்கு கிடைக்கும் சம்பளம் மிகவும குறைவுதான் எனவும் குற்றம் சாட்டினார். 

இந்த குற்றச்சாட்டிற்கு தெலுங்கு திரையுலகினர் மறுப்பு தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் பெண் நடிகைகளும் இவரது குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவித்து வந்தனர். இதனையடுத்து தெலுங்கு திரையுலகில் இவர் நடிப்பதற்கான உரிமத்தினை தெலுங்கு திரையுலகம் ரத்து செய்தது.

இந்நிலையில் தெலுங்கு திரைப்பட துறையின் இந்த முடிவினை எதிர்த்தும், தனக்கு நியாம் வேண்டும் என கோரியும் இவர் இன்று அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார்!

Trending News