அனல் பறந்த விஜய் பேச்சு!! பரந்தூரில் அவர் பேசிய விஷயங்கள் என்னென்ன? ஹைலைட்ஸ் இதோ..

TVK Leader Vijay Speech In Parandur : தமிழக வெற்றிக்கழகம் தலைவரான விஜய், பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிராக போராட்டம் நடந்து வருவதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அங்கு பேரணி மேற்கொண்டார். அங்கு அவர் பேசிய விஷயங்கள் குறித்து இங்கு பார்ப்போம்.

TVK Leader Vijay Speech In Parandur : பரந்தூரில் விமான நிலையம் அமைக்க கூடாது என்று கூறி, மக்கள் பலர் அங்கு போராட்டம் நடத்தி வருகின்றனர். 950 நாட்களுக்கும் மேலாக இந்த போராட்டம் நடைப்பெற்று வருவதையொட்டி, தமிழக வெற்றிக்கழகம் அரசியல் கட்சியின் தலைவர் விஜய், இன்று பரந்தூருக்கு சென்று, அந்த போராட்டம் குறித்தும், மத்திய-மாநில அரசுகள் குறித்தும் பேசினார். இவர் பேசிய விஷயங்கள் தற்போது மக்களிடையே கவனத்தை ஈர்த்து வருகிறது.

1 /7

பரந்தூரில் விமான நிலையம் அமைக்க கூடாது என்று கூறி, சிறுவன் ராகுல் பேசிய வீடியோ தனக்கு தாக்கத்தை ஏற்படுத்தியதாக விஜய் கூறினார். அந்த சிறுவன், “விமான நிலையம் வந்தால் நாங்க என்ன பறக்கவா போறோம்?” என்று அந்த சிறுவன் வீடியோவில் பேசியிருந்தார். 

2 /7

தவெக-வின் முதல் மாநாட்டிலேயே இயற்கை வளங்கள் பாதுகாப்பு மற்றும் விவசாயிகள் பாதுகாப்பு குறித்த கொள்கைகளை தெரிவித்திருந்ததாக பேசினார். மேலு, இந்த மண்ணுக்ககவும் மக்களுக்காகவும் சட்டப்போராட்டம் நடத்தவும் தான் தயங்கப்போவதில்லை என்றும் கூறினார்.

3 /7

பரந்தூர் விமான நிலைய பிரச்சனையில் மக்களுடன் உறுதியுடன் இருப்பேன் என கூறிய அவர், அந்த ஊரின் தெய்வம் உங்களுக்கு துணையாக நிற்கும், நம்பிக்கையை விட்றாதீங்க என்றும் பேசினார்.

4 /7

“நான் வளர்ச்சிக்கு எதிரானவன் அல்ல. ஆனால், வளர்ச்சி என்ற பெயரில் விவசாயிகளுக்கு இன்னல் கொடுப்பதை எதிர்க்கிறேன்” என்று விஜய் கூறினார். மேலும், பரந்தூரில் விமான நிலையம் வேண்டாம் என்ற மக்களின் கருத்தையும் ஆதரிப்பதாக அவர் கூறினார்.

5 /7

திமுக அரசை நோக்கி கேள்வி கணைகளை தொடுத்த விஜய், “எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஒரு நிலைப்பாடு, இப்போது ஒரு நிலைப்பாடா?” என்று பேசினார். இதற்கு 8 வழிச்சாலை விஷயத்தை எடுத்துக்காட்டாக கூறினார். 

6 /7

தனக்கு போராட்ட திடலில் மக்களை சந்திக்க வேண்டும் என்று ஆசை இருந்ததாகவும், ஆனால் தனக்கு அனுமதி கிடைக்கவில்லை என்றும் விஜய் கூறினார். தனக்கு ஏன் தடை விதிக்கப்பட்டது என தெரியவில்லை என்றும் அவர் கூறினார். 

7 /7

விஜய் பேச்சுக்கு, சமூக வலைதளங்களில் ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. விஜய்யின் பரந்தூர் வருகை, கண்டிப்பாக ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என சில அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.