மும்பை: மும்பையில் உள்ள கிர்கான் மாஜிஸ்திரேட் நீதிமன்றம், 66 வயது பெண் ஒருவரை மோசமான வார்த்தைகளால் திட்டியதற்காகவும், "நடுவிரலைக் காட்டியதற்காகவும்" கார் ஓட்டுனரை குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர், 33 வயதான அனிகேத் பாட்டீல் என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர் பெண்ணுக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தல் தந்தால், அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அதாவது செப்டம்பர் 17, 2018 அன்று அந்தப் பெண்மணியும், அவரது மகனும் தங்கள் அலுவலகத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அவர்கள் மும்பையில் உள்ள மகாலக்ஷ்மி அருகே கேட்பெரி சிகப்பு விளக்கு பகுதியில் கார் நின்றுக்கொண்டு இருக்கும் போது, அவர்களின் இடது பக்கத்திலிருந்து ஒரு சிவப்பு கார் வந்து டிவைடரை இடித்து சென்றுள்ளது. அடுத்த சிகப்பு விளக்கு சந்திப்பில் நின்றுக்கொண்ருக்கும் போது, அவர்களின் காருக்கு இணையாக இடது பாதையில் அந்த சிவப்பு கார் நின்றது. கார் ஓட்டுநர் ஜன்னலைக் கீழே இறக்கி, அந்தப் பெண்ணுக்கும் அவரது மகனுக்கும் நடுவிரலைக் காட்டியதாகக் கூறப்படுகிறது.
அதேநேரத்தில் அந்த சிகப்பு காரின் ஓட்டுநரை அவர்கள் அமைதிப்படுத்த முயன்றுள்ளனர். ஆனால் அவர் அந்த 66 வயது பெண்ணை துஷ்பிரயோகம் செய்துள்ளார். அப்போது அவரது மகன் அந்த சிவப்பு நிற காரை தடுத்த நிறுத்த முயற்சித்த போது சிக்னலை தாண்டி வேகமாக சென்றுள்ளது. இதுக்குறித்து சம்பவ இடத்திற்கு வந்து போக்குவரத்து காவலரிடம் கூறி வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ALSO READ | பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை: பதவியை ராஜினாமா செய்த ஆஸ்திரேலிய கேப்டன்!
இந்தச்சம்பவம் குறித்து அனிகேத் பாட்டீல் (சிகப்பு காரின் ஓட்டுநர்) கூறுகையில், அந்தப் பெண்ணின் மகன் ஒரு வழக்கறிஞர், தன் செல்வாக்கைப் பயன்படுத்தி தன் மீது பொய் வழக்குப் பதிவு செய்ததாகக் குற்றம் சாட்டினார்.
இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் நதீம் ஏ படேல் கூறுகையில், எவ்வாறாயினும், பெண்ணின் சாட்சியங்கள் மூலம் எஃப்ஐஆரில் பதிவு செய்யப்பட்டது முழுமையாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளன என்றும் போக்குவரத்து கான்ஸ்டபிள் உட்பட பிற சாட்சிகளின் சாட்சியங்களுடன் ஒத்துப்போகின்றன என்றும் கூறினார்.
"காவல்துறையும் வழக்கறிஞர்களும் சட்ட அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்றாலும், அவர்கள் சுதந்திரமானவர்கள். பெண்ணின் மகன் வழக்கறிஞராக இருப்பதால், காவல்துறை தவறாக எஃப்ஐஆர் பதிவு செய்யலாம் என்று அர்த்தம் இல்லை. மேலும் வக்கீல் அல்லது அவரது உறவினர்கள் பாதிக்கப்படும் போது, அவர்கள் தவறு செய்பவர் மீது நிச்சயமாக சட்ட நடவடிக்கை எடுப்பார்கள். எனவே இது தவறான எஃப்ஐஆர் என்று அர்த்தமல்ல" என்று மாஜிஸ்திரேட் படேல் கூறினார்.
ALSO READ | அரசு பேருந்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு - நடத்துனர் கைது!
மேலும், 66 வயதை எட்டிய எந்தப் பெண்ணும் சின்னச் சின்னப் பிரச்னைகளுக்குப் பொய்யான எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ய மாட்டார்கள். ஒரு மகன் தன் தாயின் பெயரில் பாலியல் துன்புறுத்தல் என பொய்யான எஃப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளார் என்ற வாதம் ஏற்கத்தக்க விஷயமல்ல எனவும் கூறினார்.
மாஜிஸ்திரேட் படேல், "குற்றம் சாட்டப்பட்டவர் மிகவும் இளமையாக இருந்தாலும், அவரும் ஒரு நடுத்தர வயதுக்காரர். அவர் என்ன செய்கிறார் என்பது அவருக்கு நிச்சயமாகத் தெரியும். அவர் செய்த செயலின் விளைவுகள் பற்றி அவருக்கு நன்றாகத் தெரியும்" என்றார்.
குற்றத்தின் தீவிரம் மற்றும் தன்மையைக் கருத்தில் கொண்டு, குற்றம் சாட்டப்பட்டவருக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும், இல்லையெனில் சமூகத்திற்கு இந்த வழக்கு ஒரு தவறான தகவலை பதிவு செய்துவிடும் என்று மாஜிஸ்திரேட் படேல் கருதினார்.
எனவே குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஆறு மாத சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் கூறியது.
ALSO READ | திருமணமான பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞரை கைது செய்த காவல்துறை
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR