உத்திர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் நடந்த ஒரு கோர சம்பவத்தில், 18 வயது இளம்பெண்ணை திருமணம் செய்ய 40 வயது ஆண் ஒருவர் கொடூர சம்பவங்களில் ஈடுப்பட்டுள்ளார்.
இதுதொடர்பான புகார் கிரேட்டர் நொய்டா காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறை தரப்பு தெரிவிக்கையில்., பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை திருமணம் செய்ய விரும்பிய 40-வயது ஆண், தனது விருப்பத்தினை அந்த பெண்ணிடம் தெரிவித்துள்ளார். ஆனால் அவரது ஆசைக்கு இளம்பெண் மறுக்க, இளம்பெண்னின் இரு கைகளையும் கட்டி வைத்து கட்டாய திருமணம் செய்ய முயற்சித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ பதிவு உள்ளூர் வாசிகளால் பதிவு செய்யப்பட்டு காவல்துறைக்கு அனுப்பப்பட்ட நிலையில், காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து இளம்பெண்னை மீட்டுள்ளனர். மேலும், இந்த குற்றச்செயலில் ஈடுப்பட்ட ஆண் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டும் வருகின்றனர்.
உத்திர பிரதேச மாநிலத்தில் இவ்வாறான சம்பவங்கள் நடப்பது இது முதல் முறை அல்ல, முன்னதாக மீரட் நகரை சேர்ந்த இளம்பெண்னை ஏலம் விட்ட சம்பவம் நாட்டு மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது அனைவருக்கும் நினைவிருக்கலாம். இந்த சம்பவத்தில் இளம்பெண்னை ஏலம் எடுக்க முற்பட்டவர்கள் பெரும்பாலும் 50 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது மீண்டும் இதுபோன்ற வழக்கு வெளிச்சத்திற்கு வந்துள்ளது.