புது தில்லி: ‘வந்தே பாரத்’ (Vande Bharat Mission) என்ற திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை தாயகம் அழைத்து வரப்படுகின்றன. அந்த திட்டத்தின் முதல் கட்டத்தின்போது, ஏர் இந்தியா (Ait India) மற்றும் அதன் துணை நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மூலம் மே 7 முதல் மே 14 வரை மொத்தம் 64 விமானங்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 12 நாடுகளில் இருந்து 14,800 இந்தியர்களை கட்டண அடிப்படையில் அழைத்து வரப்படும். அதில் நேற்று வரை 8,500 பேர் நாடு திரும்பி உள்ளனர்.
அதேபோல வந்தே பாரத் மிஷனின் (Vande Bharat Mission) இரண்டாம் கட்டத்தில், மே 16 முதல் 22 வரை 149 விமானங்களில் 31 நாடுகளில் இருந்து 30,000 இந்தியர்கள் திரும்புவார்கள் என்று சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் (Civil Aviation Ministry) ஹர்தீப் சிங் பூரி (Hardeep Singh Puri) புதன்கிழமை தெரிவித்தார்.
மேலும் கூறிய அவர் (Hardeep Singh Puri), "மே 16-22 வரையிலான வந்தே பாரதத்தின் (Vande Bharat Mission) இரண்டாம் கட்டத்தில் ஆர்மீனியா, ஆஸ்திரேலியா, பெலாரஸ், கனடா, பிரான்ஸ், ஜார்ஜியா, ஜெர்மனி, இந்தோனேசியா, அயர்லாந்து, இத்தாலி, ஜப்பான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், நேபாளம், நைஜீரியா, ரஷ்யா, தஜிகிஸ்தான், தாய்லாந்து மற்றும் உக்ரைன் போன்ற நாடுகளில் இருந்து அழைத்து வரப்படுவார்கள்" என்று பூரி (Hardeep Singh Puri) ட்வீட் செய்துள்ளார்.
"#VandeBharatMission - Touching Lives - making a difference
Mr. Rabi and Mrs. Sumita who had come to the US as tourists narrate their story@SandhuTaranjitS @airindiain @DrSJaishankar @MoHFW_INDIA @MEAIndia @PMOIndia @MoCA_Gol @PIB_India @HarshShringla pic.twitter.com/RvemJ64GK2— India in USA (@IndianEmbassyUS) May 13, 2020
புதன்கிழமை காலை வரை 8,500 இந்தியர்கள் ஏற்கனவே திரும்பியுள்ளதாகவும், வந்தே பாரத் மிஷனின் முதல் கட்டத்தின் ஒரு பகுதியாக மேலும் விமானங்கள் இயக்கி வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
"வந்தே பாரத்தின் (Vande Bharat Mission) முதலாம் கட்டத்தில் 64 விமானங்களில் 14,800 இந்தியர்களை நாங்கள் திரும்ப அழைத்து வந்தோம்... 2 வது கட்டத்தில் எண்ணிக்கை இரட்டிப்பாக இருக்கும். 319 நாடுகளில் இருந்து சுமார் 30,000 இந்தியர்கள் 149 விமானங்களில் திரும்புவர்" என்று அவர் (Hardeep Singh Puri) கூறினார்.
இரண்டாம் கட்டத்தின் கீழ் 149 விமானங்களில் 31 கேரளா, 22 டெல்லி, 17 கர்நாடகா, 16 தெலுங்கானா, 14 குஜராத், 12 ராஜஸ்தான், ஒன்பது ஆந்திரா மற்றும் ஏழு பஞ்சாபிற்கு இயக்கப்படும்.
வந்தே பாரத் மிஷனின் (Vande Bharat Mission) இரண்டாம் கட்டத்தின்போது, பீகார் மற்றும் உத்தரபிரதேசத்திற்கு தலா ஆறு விமானங்கள், ஒடிசாவிற்கு மூன்று, சண்டிகருக்கு இரண்டு, மற்றும் ராஜஸ்தான், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநிலங்களுக்கு தலா ஒரு விமானங்கள் இயக்கப்படும்.
விமானத்தை தவிர, இந்திய கடற்படை தனது இரண்டு கப்பல்களை வெளிநாட்டிலிருந்து இந்தியர்களை திருப்பி அனுப்புவதற்காக அனுப்பியுள்ளது. மார்ச் 7 முதல், இந்த இரண்டு கப்பல்களும் வந்தே பாரத் மிஷனின் ஒரு பகுதியாக மாலத்தீவில் இருந்து சுமார் 1,000 இந்தியர்களை திருப்பி அனுப்பியுள்ளன.
கொரோனா வைரஸ் (Coronavairus) நாவலின் பரவலைத் தடுக்க மார்ச் 25 முதல் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த Covid-19 வைரஸால் 74,200 க்கும் மேற்பட்டவர்களைப் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை 2,400 பேரைக் பேர் இறந்துள்ளனர். அனைத்து வணிக பயணிகள் விமானங்களும் ஊரடங்கு காலத்தில் தடை செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்ததக்கது.