கல்லூரி மாணவிக்கு மதுவை கொடுத்து கூட்டுப்பலதகாரம் செய்த வழக்கில் காவல்துறையினர் மூன்று பேரை கைது செய்துள்ளனர்!!
உத்தர பிரதேசத்தில், யுனானி மருத்துவ கல்லுாரியில் படிக்கும், 20 வயது மாணவியை மூன்று பேர் கடத்தி சென்ற மர்ம நபர்கள், அவரை கட்டாயப்படுத்தி மது அருந்த செய்து, மாணவி மயக்கம் அடைந்ததும், அவரை ஒருவர் பின் ஒருவராக பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம், சண்டோலி மாவட்டத்தில் உள்ள மருத்துவ கல்லுாரியில், யுனானி மருத்துவம் படிக்கும், 20 வயது மாணவி, வீடு திரும்புவதற்காக பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் மூன்று பேர், கத்தியை காட்டி மிரட்டியும், தங்கள் பேச்சை கேட்காவிட்டால், அவரின் வீட்டாரை கொன்று விடுவதாகவும் மிரட்டி, தங்களுடன் அழைத்துச் சென்றனர்.
மாணவியை ஓர் வீட்டில் அடைத்து, அவரை கட்டாயப்படுத்தி மது அருந்தச் செய்தனர். மது போதையில் மயங்கியதும், அவரை, மூவரும் மாறி மாறி பலாத்காரம் செய்தனர். பின் அவர்களும் மது அருந்திவிட்டு மயக்கமாயினர். மாணவி கண் விழித்த போது, மூவரும் மயங்கி கிடந்ததால், அவர் அங்கிருந்து தப்பி வீட்டிற்கு சென்றடைந்தார்.
இந்த சம்பவம் குறித்து, போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மாணவியை பலாத்காரம் செய்த ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இருவர் மீது வழக்குப் பதிவு செய்து, அவர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.