கர்நாடகாவில் பொதுத்தேர்வை புறக்கணித்த 20,000 பேர்! அமைச்சர் மறுப்பு

கர்நாடகா மாநிலத்தில் நேற்று தொடங்கிய 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 20,994 மாணவ- மாணவிகள் தேர்வு எழுத வரவில்லை என அம்மாநில அரசின் தரவுகள் தெரிவிக்கின்றன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 29, 2022, 03:20 PM IST
  • கர்நாடகாவில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 20,994 மாணவ- மாணவிகள் தேர்வு எழுத வரவில்லை.
  • கர்நாடக மாணவிகள் 99.99 சதவீதம் பேர் ஹிஜாப் அணியாமல் தேர்வு எழுதியதாக அமைச்சர் தகவல்.
கர்நாடகாவில் பொதுத்தேர்வை புறக்கணித்த 20,000 பேர்! அமைச்சர் மறுப்பு title=

கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள கல்லூரி ஒன்றில் தொடங்கிய ஹிஜாப் சர்ச்சை தற்போது நாடு முழுவதும் விவாதப் பொருளாகியுள்ளது. அதே சமயம் ஹிஜாப் தொடர்பான சர்ச்சைகளும் பல இடங்களில் வெளிவருகின்றன. கர்நாடகாவில் வகுப்பறைக்குள் ஹிஜாப் அணிவதற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

ஹிஜாப் சர்ச்சையில் அனைவரும் சீருடை அணியும் விதியை பின்பற்ற வேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்நிலையில், கர்நாடகாவில் இன்று முதல் ஏப்ரல் 11-ம் தேதி வரையில் 10ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு நடைபெறுகிறது.  இந்த பொதுத்தேர்வுக்கு சீருடை அணியாமல் வந்த மாணவி ஒருவரை சீருடை அணிந்து வருமாறு அறிவுறுத்தி பின்னர் அவர் சீருடையை மாற்றி வந்தபின் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டார்.

அதேபோல் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளிடம் அதனை கழட்டுமாறு அறிவுறுத்தப்பட்டது. அவர்களும் ஒத்துழப்பு வழங்கி ஹிஜாபை கழற்றிவிட்டு தேர்வு எழுதினர்.

மேலும் படிக்க | ஸ்டாலின் கல்லா பெட்டியைத்தான் திறக்கிறார்; சட்டம் - ஒழுங்கு சந்தி சிரிக்கிறது: ஜெயக்குமார் குற்றச்சாட்டு

BC Nagesh

இதையடுத்து முதல் நாள் தேர்வு முடிந்ததும், செய்தியாளார்களை சந்தித்த கல்வி அமைச்சர் பி.சி. நாகெஷ் பேசுகையில், "ஹிஜாப் விவகாரம் சில மக்களால் ஏற்படுத்தப்பட்டது என்று நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.

கர்நாடக மாணவிகள் 99.99 சதவீதம் பேர் ஹிஜாப் அணியாமல் தேர்வு எழுதினர். நான்கு மாணவிகள் மட்டுமே தேர்வு எழுதாமல் வெளியேறியதாக தகவல் வந்துள்ளது.

அவர்கள் மாணவிகளா அல்லது தேர்வு நடைமுறைக்கு இடையூறு செய்வதற்காக வந்த வேறு யாரேனுமா என்பதை உறுதி செய்யவேண்டும்" என்று தெரிவித்தார்.

இதற்கிடையில், கர்நாடகாவில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை இன்று மட்டும் 8.48 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதியுள்ளனர். இதில் 20,994 பேர் தேர்வெழுத வரவில்லை என மாநில அரசின் தரவுகள் தெரிவிக்கின்றன என்பது குறிப்பிடதக்கது.

மேலும் படிக்க | முதலமைச்சர் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு..பாஜக நிர்வாகி கைது

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News