பீகார் மாநிலத்தின் 5 மாவட்டங்களில் மின்னல் தாக்கி 20 பேர் உயிரிழப்பு...!!

முதலமைச்சர் நிதீஷ்குமார் இறப்புகள் குறித்து வருத்தம் தெரிவித்ததோடு, இறந்த ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் தலா ரூ. 4 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். 

Last Updated : Jul 5, 2020, 08:51 AM IST
    1. பீகார் மாநிலத்தின் ஐந்து மாவட்டங்களில் சனிக்கிழமை (ஜூலை 4, 2020) மின்னல் தாக்கி 20 பேர் உயிரிழப்பு.
    2. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 4 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும்
    3. பீகார் முதலமைச்சர் மாநில மக்கள் விழிப்புடன் இருக்கவும், வீட்டுக்குள்ளேயே இருக்கவும் வலியுறுத்தியுள்ளார்
பீகார் மாநிலத்தின் 5 மாவட்டங்களில் மின்னல் தாக்கி 20 பேர் உயிரிழப்பு...!! title=

பாட்னா: பீகார் மாநிலத்தின் ஐந்து மாவட்டங்களில் சனிக்கிழமை (ஜூலை 4, 2020) மின்னல் தாக்கி 20 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

உயிரிழந்த 20 பேரில், ஒன்பது பேர் போஜ்பூர் மாவட்டத்தில் இருந்தும், ஐந்து பேர் சரண் மாவட்டத்திலிருந்தும், மூன்று கைமூர் மாவட்டத்திலிருந்தும், இருவர் பாட்னாவிலிருந்தும், ஒரு மரணம் பக்ஸரில் பதிவாகியுள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது.

 

READ | ஆறு பீகார் மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய மழை: இந்தியா வானிலை ஆய்வு மையம்

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 4 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும் என்று முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார். மேலும், மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். 

 

 

 

பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் மாநில மக்கள் விழிப்புடன் இருக்கவும், வீட்டுக்குள்ளேயே இருக்கவும் வலியுறுத்தியுள்ளார், மேலும் பாதுகாப்பாக இருக்க பேரிடர் மேலாண்மைத் துறை வழங்கிய ஆலோசனைகளைப் பின்பற்றுமாறு மக்களைக் கேட்டுக் கொண்டார்.

இதற்கிடையில், முன்னதாக மாநிலத்தில் பருவமழை வந்த பின்னர் மாநிலத்தில் மின்னல் தாக்கியதால் சுமார் 130 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

READ | விவசாயிகள் தங்கள் உற்பத்தியை சர்வதேச சந்தையில் விற்க ஒரு எளிய வழி!

 

அளவுக்கு அதிகமான வெயில் தாக்கம் கிழக்கு உத்தரப்பிரதேசம், பீகாரில் நிலவுவதாலும், வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள பெருங்காற்றாலும் பீகாரில் அசாதாரண வானிலை நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Trending News