மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலையில் மிகப்பெரிய அகவிலைப்படி உயர்வு: அறிவிப்பு விரைவில்

7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியர்களின் அகவிலை நிவாரணம் ஆகிய இரண்டையும் ஆண்டுக்கு இருமுறை, அதாவது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அரசு உயர்த்துகிறது. இந்த ஆண்டும் ஊழியர்களுக்கு ஜூலையில் உயர்வு காத்திருக்கின்றது.

 

7th Pay Commission:தற்போது மத்திய அரசு ஊழியர்கள் 50% அகவிலைப்படியை பெற்று வருகிறார்கள். இது ஜனவரி 2024 முதல் நடைமுறையில் உள்ளது. இதற்கான அறிவிப்பு மார்ச் மாதம் வந்தது. ஜூலை 2024 -க்கான அகவிலைப்படி 4% முதல் 5% வரை அதிகரிக்கக்கூடும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அப்படி நடந்தால் ஊழியர்களின் ஊதியத்க்தில் மிகப்பெரிய ஏற்றம் இருக்கும். 

1 /8

மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் ஒரு பெரிய பரிசு கிடைக்கவுள்ளது. அகவிலைப்படி (DA) ஜூலை 2024 இல் அதிகரிக்கும். இந்த உயர்வு எவ்வளவு இருக்கும் என்பது பற்றி பல ஊகங்கள் உள்ளன. ஜூலை 2024 -க்கான அகவிலைப்படி 4% முதல் 5% வரை அதிகரிக்கக்கூடும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அப்படி நடந்தால் ஊழியர்களின் ஊதியத்க்தில் மிகப்பெரிய ஏற்றம் இருக்கும். அதை பற்றி இந்த பதிவில் காணலாம்

2 /8

ஆண்டுக்கு 2 முறை அரசாங்காம்  அகவிலைப்படியை அதிகரிக்கின்றது. ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு கடந்த ஆண்டு ஜூலை முதல் டிசம்பர் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு (AICPI Index) எண்களின் அடிப்படையிலும், ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு, ஜனவரி முதல் ஜூலை வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் அடிப்படையிலும் கணக்கிடப்படுகின்றது. 

3 /8

தற்போது மத்திய அரசு ஊழியர்கள் 50% அகவிலைப்படியை பெற்று வருகிறார்கள். இது ஜனவரி 2024 முதல் நடைமுறையில் உள்ளது. இதற்கான அறிவிப்பு மார்ச் மாதம் வந்தது. அகவிலைப்படி 4% அதிகரிக்கப்பட்டு 46% ஆக இருந்த அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் (Dearness Relief) 50% ஆக உயர்ந்தது. 

4 /8

ஜூலை மாதத்திற்கான டிஏ உயர்வு (DA Hike) அறிவிப்பு ஆகஸ்ட் மாதம் வெளிவரும் என எதிர்பார்க்கபடுகின்றது. இது செப்டம்பர் ஊதியத்தில் சேர்த்து வழங்கப்படலாம். மேலும் இதனுடன் ஜூலை 2024 முதலான டிஏ உயர்வின் அரியர் தொகையும் சேர்த்து வழங்கப்படும். 

5 /8

ஜூலை மாத அகவிலைப்படி உயர்வை கணக்கிட ஜனவரி முதல் ஜூலை வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு எண்கள் தேவைப்படுகின்றன. எனினும், முன் எப்போதும் இல்லாத வகையில், தொழிலாளர் அமைச்சகம் சில மாதங்களாக இந்த எண்களை வெளியிடவில்லை. ஜனவரி 2024-க்கான எண்கள் மட்டுமே இதுவரை வெளிவந்துள்ளன. எனினும், இவை மொத்தமாக வெளியிடப்படும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

6 /8

7வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளின் படி, அகவிலைப்படி 50% ஆனவுடன் அது பூஜ்ஜியமாக்கப்பட்டு, அகவிலைப்படி தொகை அடிப்படை ஊதியத்துடன் சேர்க்கப்பட வேண்டும் என்ற விதி உள்ளது. எனினும், இது கட்டாயமல்ல. அதோடு, அகவிலைப்படி 50% -ஐத் தாண்டிச் செல்லும்போதுதான் அது பூஜ்ஜியம் ஆக்கப்படும் என்றும், இப்போது அது 50% -இல் உள்ளதால், அது பூஜ்ஜியம் ஆக்கப்படாமல் அதைத் தாண்டிச் செல்லும் என்றும், அடுத்த திருத்தத்தின் போது இது நடக்கலாம் என்றும் சிலர் கூறுகிறார்கள். 

7 /8

தற்போது புதிய அரசு பொறுப்பேற்கவுள்ள நிலையில், விரைவில் ஏஐசிபிஐ தரவுகள் பற்றிய விவரங்கள் கிடைக்கும் என்றும், அதன் பிறகு அகவிலைப்படி உயர்வுக்கான அறிவிப்பும் விரைவில் வெளிவரும் என்றும் நம்பப்படுகின்றது. இந்த உயர்வு மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மிகப்பெரிய நிவாரணத்தை அளிக்கும். 

8 /8

பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வு அல்லது ஊதிய உயர்வுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.