தோனி 2007 டி20 உலகக் கோப்பை, 2011 உலகக் கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபிக் என ஐசிசி கோப்பைகளை இந்தியாவிற்கு வென்று கொடுத்துள்ளார். தோனிக்கு பிறகு இந்தியா இன்னும் ஐசிசி பட்டத்தை வெல்லவில்லை. விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா போன்ற ஜாம்பவான்கள் இருந்தாலும் அவர்களால் ஐசிசி கோப்பையை வெல்ல முடியவில்லை. இந்நிலையில், 2008 முதல் 2010 வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடிய ஆஸ்திரேலிய வீரரும் முன்னாள் சிஎஸ்கே வீரருமான மேத்யூ ஹைடன் தோனியின் பண்பு மற்றும் அவரது நட்சத்திர அந்தஸ்து மிகவும் பெரியது என்று கூறியுள்ளார். தோனி மிகவும் தன்னலமற்ற கிரிக்கெட் வீரர் என்றும், அவர் விரும்பினால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டனாக முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மா இல்லை? ஜெய்ஸ்வால் களமிறங்குகிறார்?
"தோனி பற்றி நான் முன்பு சொன்னது சரியாகத்தான் இருக்கிறது. அவர் ஆஸ்திரேலிய டிரஸ்ஸிங் ரூமில் எளிதாக அமர்ந்து கேப்டனாக இருக்க முடியும், ஏனென்றால் அவர் யாரையும் விட பெரியவர் அல்ல என்று அவர் நம்புகிறார்" என்று சமீபத்திய நேர்காணலில் ஹைடன் தெரிவித்துள்ளார். அவர் எவ்வளவு பெரியவர் அல்லது அவர் என்ன சாதித்தார் என்று ரசிகர்களிடம் ஒருபோதும் பேச மாட்டார். அது தான் தோனி, அதுதான் தோனியின் எக்ஸ் காரணி. தோனி சுயவிளம்பரத்திற்காக எதுவும் செய்வதில்லை. ஈகோ இல்லாத மனிதர் என்று மேலும் கூறியுள்ளார்.
தோனியின் எதிர்காலம்
ஆகஸ்ட் 2020ல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற தோனி ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே விளையாடி வந்தாலும் 2021 மற்றும் 2023ல் இரண்டு ஐபிஎல் பட்டங்களை வென்றுள்ளார். தற்போது சென்னை அணியின் கோப்பை எண்ணிக்கையை ஐந்தாக கொண்டு சென்றுள்ளார். ஐபிஎல் 2024 ப்ளேஆஃப்களுக்குத் தகுதிபெறத் தவறிய பிறகு, தோனியின் எதிர்காலம் என்னவென்று யாருக்கும் தெரியாது. ஆனால் தோனி எப்போதும் தலைசிறந்த தலைவராக இருப்பார். ஒரு சிறிய கிராமத்தில் இருந்து வந்து, இந்தியாவில் உள்ள மக்களின் குறிப்பாக சென்னையில் உள்ள மக்களின் இதயங்களை வென்றுள்ளார். அவர் எப்போதும் அணியை முன்னிலைப்படுத்துவதை அனைவரும் விரும்புகின்றனர்.
தோனி அடுத்து என்ன செய்ய போகிறார் என்பது குறித்து தற்போது சிஎஸ்கே ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர். இது குறித்து பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன், தோனி அடுத்த ஆண்டு விளையாடுவாரா? மாட்டாரா? என்பது அவர் எடுக்கும் முடிவு. எங்களுக்கு அவர் விளையாட வேண்டும் என்று தான் ஆசை என்று தெரிவித்துள்ளார். தோனியின் எதிர்காலம் பற்றிய அனைத்து ஊகங்களையும் தோனி தான் நீக்க முடியும். இருப்பினும் அடுத்த ஆண்டு ஒரு இறுதி இன்னிங்சிற்காக தோனி மீண்டும் வருவார் என்று நம்புகிறோம் என்று மேலும் கூறினார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ