சிக்கிமில் மேக வெடிப்பு: சிக்கிமில் மேக வெடிப்பைத் தொடர்ந்து டீஸ்டா ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக 23 ராணுவ வீரர்கள் மாயமாகினர். டிஃபென்ஸ் பிஆர்ஓவின் கூற்றுப்படி, செவ்வாய்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் லோனாக் ஏரியின் மீது மேகம் வெடித்தது, அதைத் தொடர்ந்து லாச்சென் பள்ளத்தாக்கில் உள்ள டீஸ்டா ஆற்றில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது.
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இராணுவ முகாம், 41 ராணுவ வாகனங்கள் மூழ்கின
குவாஹாட்டி ராணுவ பாதுகாப்புப் பிஆர்ஓ கூறுகையில், லாச்சென் பள்ளத்தாக்கில் மேகவெடிப்பு காரணமாக திடீரென டீஸ்டா ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டது. மேக வெடிப்பு சம்பவத்திற்குப் பிறகு, டீஸ்டா ஆற்றின் நீர்மட்டம் திடீரென 15 முதல் 20 அடி வரை அதிகரித்தது. ஆற்றை ஒட்டிய பகுதியில் இராணுவ முகாம் ஒன்று இருந்தது. அது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. திடீரென தண்ணீர் அதிகரித்ததால், சுங்தாங் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதையடுத்து ஆற்றை ஒட்டியுள்ள தாழ்வான பகுதிகளும் மூழ்கத் தொடங்கின. இங்கு சிங்டம் அருகே பர்டாங்கில் நிறுத்தப்பட்டிருந்த 41 ராணுவ வாகனங்கள் நீரில் மூழ்கின. மக்கள் வீடுகளை விட்டு பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்து செல்லப்பட்டனர். இதுவரை 80 உள்ளூர்வாசிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு உள்ளனர் எனக் கூறப்பட்டு உள்ளது.
மேலும் படிக்க - சிறுபான்மையினரின் உரிமைகளை பறிக்க காங்கிரஸ் விரும்புகிறதா? மோடி பேச்சு
ராணுவ வீரர்களைத் தேடும் பணி தொடர்கிறது
விபத்துக்குப் பிறகு, காணாமல் போன ராணுவ வீரர்களைத் தேடும் பணி தொடங்கப்பட்டு உள்ளதாக கவுகாத்தியின் பாதுகாப்புப் பிரிவு அதிகாரி தெரிவித்தார். உள்ளூர் நிர்வாகமும் அதன் மட்டத்தில் மீட்புப் பணியை மேற்கொண்டு வருகிறது. எவ்வாறாயினும், உயிர்ச்சேதம் மற்றும் சொத்து சேதம் தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
ஜூன் 16ம் தேதியும் மேக மூட்டம் ஏற்பட்டது
முன்னதாக, ஜூன் 16 ஆம் தேதியும் சிக்கிமில் மேக மூட்டம் காணப்பட்டது. பாக்யோங்கில், நிலச்சரிவு மற்றும் மேகம் வெடித்ததால் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் பலர் பாதிக்கப்பட்டனர்.
வடகிழக்கு மாநிலங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என எச்சரிக்கை
அக்டோபர் 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பீகார், ஜார்கண்ட், ஒடிசா, மேற்கு வங்காளம், சிக்கிம், அசாம், மேகாலயா, அருணாச்சல பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம் மற்றும் திரிபுரா ஆகியவை இதில் அடங்கும்.
flash flood at Muguthang in North Sikkim resulted in complete damage of two permanent bridges at Dikchu and Toong . Locals being rescued by BRO Karamyogis and rescue ops is under progress to save lives.@SpokespersonMoD @adgpi @BROindia pic.twitter.com/AfovOyq5gr
— PRO, GUWAHATI, MINISTRY OF DEFENCE, GOVT OF INDIA (@prodefgau) October 4, 2023
சிக்கிமின் நான்கு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை
சிக்கிமின் 4 மாவட்டங்களில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் அக்டோபர் 8 ஆம் தேதி வரை மூடப்படும் என்று கல்வித் துறை சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க - சுமார் 40 வினாடி சக்திவாய்ந்த நிலநடுக்கம்! வீடு, அலுவலகத்தை விட்டு வெளியேறிய மக்கள்
இந்த ஆண்டு 4 முக்கிய மேக வெடிப்பு சம்பவங்கள்...
ஆகஸ்ட் 24: இமாச்சலப் பிரதேச மாநிலம் மண்டியில் மேக வெடிப்பு ஏற்பட்டது. இதில் 51 பேர் சிக்கினர். NDRF குழுவினர் அனைவரையும் பத்திரமாக மீட்டனர். பாடி மாவட்டத்தில் பெய்த மழையால் பாலாட் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பாலம் இரண்டாக உடைந்தது. பாண்டோவில், பள்ளி கட்டிடம் சாக்கடையில் அடித்துச் செல்லப்பட்டபோது, இடிபாடுகளில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார்.
ஆகஸ்ட் 9: இமாச்சலப் பிரதேசத்தின் சிர்மௌர் மாவட்டத்தில் உள்ள பௌண்டா சாஹிப்பில் மேகம் வெடித்தது, இதன் காரணமாக சிர்மவுரி தால் கிராமத்தில் திடீர் வெள்ளம் காரணமாக ஒரு வீடு இடிந்து விழுந்தது. இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பாதிக்கப்பட்டனர். இதில் இரண்டு குழந்தைகளும் அடங்குவர். இரண்டு பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.
ஜூலை 22: சிம்லாவில் மேக வெடிப்பு காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் ஏராளமான வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன. அங்கு ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. எனினும், உயிர்ச்சேதம் குறித்து எந்த தகவலும் இல்லை. இருப்பினும், மழை காரணமாக, சம்பா-பதான்கோட் தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டதால் நெடுஞ்சாலை மூடப்பட்டது.
ஜூலை 25: இமாச்சலப் பிரதேசத்தின் சிம்லா மாவட்டத்தில் உள்ள ராம்பூரில் மேக வெடிப்பு பெரும் அழிவை ஏற்படுத்தியது. ராம்பூர் தொகுதி சர்தாரா பஞ்சாயத்துக்கு உட்பட்ட கந்தர் கிராமத்தில் மேகம் வெடித்ததால் தொடக்கப்பள்ளி, இளைஞர் சங்கம் உள்ளிட்ட 6 வீடுகள் இடிந்து விழுந்தன. ஒன்றரை டசனுக்கும் மேற்பட்ட வளர்ப்பு கால்நடைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. பல வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததுடன், பல வாகனங்களும் சேதமடைந்தன.
23 army personnel have been reported missing due to a flash flood that occurred in Teesta River in Lachen Valley after a sudden cloud burst over Lhonak Lake in North Sikkim: Defence PRO, Guwahati https://t.co/zDabUMrCaI pic.twitter.com/uWVO1nsT2T
— ANI (@ANI) October 4, 2023
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ