கடந்த 2017ம் ஆண்டில் 6,500 ஐஏஎஸ் அதிகாரிகள் இருக்க வேண்டிய நிலையில், 5,004 அதிகாரிகள் இருக்கின்றனர். 1,496 இடங்கள் காலியாக இருக்கின்றன.என மத்திய அரசு பாராளுமன்றத்தில் தெரிவித்து உள்ளது.
>உத்தரப்பிரதேசத்தில் 621 ஐஏஎஸ் அதிகாரிகள் தேவைப்படும் நிலையில், 515 அதிகாரிகள் மட்டுமே இருக்கிறார்கள்.
>பீகாரில் 342 அதிகாரிகளுக்கு 243 அதிகாரிகளும், மேற்கு வங்காளத்தில் 359 அதிகாரிகளுக்கு 277 அதிகாரிகளும், மத்திய பிரதேசத்தில் 439 அதிகாரிகளுக்கு 341 அதிகாரிகளும், கேரளாவில் 231 அதிகாரிகளுக்கு 150 அதிகாரிகளும் பணியில் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
>தமிழகத்தில் மொத்தம் 376 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதிலாக 289 அதிகாரிகள் மட்டுமே பணியில் உள்ளனர். தமிழகத்தில் 87 அதிகாரிகள் பற்றக்குறை உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
>இதேபோல தெலங்கானாவில் 130 ஐஏஎஸ் அதிகாரிகள், இமாச்சலப் பிரதேசத்தில் 115 அதிகாரிகள், ஜம்மு காஷ்மீரில் 91 அதிகாரிகள், நாகாலாந்தில் 67, சிக்கிம்மில் 37, குஜராத்தில் 241 அதிகாரிகள் பற்றாக்குறையாக இருக்கிறார்கள்.
>கடந்த 6 ஆண்டுகளாக ஐஏஎஸ் தேர்வில் அதிக அளவில் நபர்களைத் தேர்வு செய்து வருகிறோம். மேலும், பதவி உயர்வு, மாநிலத்தில் ஐஏஎஸ் தரத்துக்கு உயர்வதற்கான பதவி உயர்வுக்காக காத்திருப்பவர்கள் குறித்து குழு அமைத்து காலி இடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.