தலைநகர் டெல்லியில் நிலவும் பனிமூட்டம் காரணாமக டெல்லிக்கு வரும் 12 ரயில்களின் சேவை தாமதப்படுத்தப் பட்டுள்ளது!
பொங்கள், சங்கராந்தி பண்டிகை முன்னிட்டு பயணிகள் வெளியூர் பயணம் மேற்கொள்வது அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் டெல்லியில் நிலவும் பனிமூட்டம் காரணமாக டெல்லியில் இருந்து புறப்படும் விமானங்கள், ரயில்களின் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
வட மாநிலங்களில் குளிர் காலத்தையொட்டி அங்கு கடும் பனி பொழியத் துவங்கியுள்ளது. இதனால், பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். கடும் பனிப்பொழிவினால் சாலை, ரயில், விமானப் போக்குவரத்துகள் பாதிப்படைந்துள்ளன. வாகன ஓட்டிகளில் எதிரே வரும் வண்டிகள் தெரியாமல் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.
12 trains to Delhi are running late today due to fog/low visibility. pic.twitter.com/adLQevgXwQ
— ANI (@ANI) January 14, 2019
இதற்கிடையில் ரயில், விமான சேவைகளிலும் கடும் பனி காரணமாக மிகவும் பாதிப்பு அடைந்துள்ளது. கடும் பனிப்பொழிவு காரணமாக, டெல்லிக்கு வரும் 12 ரயில்கள் தாமதமாக புறப்படும் எனவும், மேலும் 10 ரயில்களின் சேவை நேரம் மாற்றியமைக்கப் பட்டுள்ளது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதுபோல இந்திராகாந்தி சர்வதேச விமான நிலைய பகுதியில் பனி சூழ்ந்ததால் டெல்லியில் இருந்து புறப்படும் விமானங்களின் சேவைகளும் தாமதம் ஆக்கப்பட்டுள்ளது.