கொசுக்கடியால் தொற்றி கிருமிதான் ‘ஜிகா’ வைரஸ். உகாண்டாவில் உள்ள ஜிகா (Zika) என்ற காட்டில் குரங்குகளை தாக்கியபோதுதான், இந்த கிருமி பற்றி 1947-ம் ஆண்டு தெரியவந்தது.
அதன் பின்னர், இந்த வைரஸ் 1952-ம் ஆண்டு உகாண்டாவிலும் தான்சானியாவிலும் மனிதர்களையும் தாக்கியது. 2007 மற்றும் 2013-ம் ஆண்டுகளில், பசிபிக் நாடுகளில் ‘ஜிகா’ வைரஸ் தாக்குதலுக்கான அறிகுறிகள் தென்பட்டது.
அமெரிக்க நாடுகளான பிரேசில் மற்றும் கொலம்பியாவிலும், ஆப்பிரிக்காவிலும் அக்கிருமி பரவியது. ஜிகா வைரஸ், தென் அமெரிக்கா, மத்திய அமெரிக்காவை சேர்ந்த 23 நாடுகளில் தாக்கியது.
இந்நிலையில் தற்போது இந்தியாவில் ஜிகா வைரஸ் பாதிப்பு இல்லை என்று கூறப்பட்டு வந்த நிலையில் அகமதாபாத்தை சேர்ந்த 3 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருந்தது. 2016-ம் ஆண்டு பிப்ரவரியில் 3 பேருக்கும் ஜிகா வைரஸ் பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து பல்வேறு கட்ட ஆய்வுகளுக்கு பிறகு சமீபத்தில், உலக சுகாதார அமைப்பிடம் மத்திய அரசு அறிக்கை அளித்தது.
இந்தியாவில் 'ஜிகா வைரஸ்' இருப்பதாக உலக சுகாதார அமைப்பு ஏற்றுக் கொண்டுள்ளது. ஜிகா வைரஸ் நோய்க்கு உலகிலேயே இந்தியாதான் முதன் முதலில் தடுப்பு மருந்தை கண்டுபிடித்து அசத்தியது.
ஐதராபாத் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு இப்போது, உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வில் இருக்கிறது.