ஒரே மாதத்தில் தொப்பை கரைய... கை கொடுக்கும் ‘சூப்பர்’ யோகாசனங்கள்!

Best Yogas to Reduce Belly Fat & Obesity: உடல் பருமன் பிரச்சனையில் இருந்து விடுபட யோகா நமக்கு கை கொடுக்கும். சில எளிய யோகாசனங்கள் மூலம் உடல் பருமனையும் தொப்பை கொழுப்பையும் எளிதாக கரைக்கலாம். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 1, 2024, 01:37 PM IST
  • எளிய யோகாசனங்கள் மூலம் உடல் பருமனையும் தொப்பை கொழுப்பையும் எளிதாக கரைக்கலாம்.
  • கொழுப்பை கரைக்கும் பிரத்யேக யோகாசனங்கள்
  • உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்துள்ளது.
ஒரே மாதத்தில் தொப்பை கரைய...  கை கொடுக்கும் ‘சூப்பர்’ யோகாசனங்கள்! title=

இன்றைய காலகட்டத்தில், உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்துள்ளது. இதற்கு நமது மோசமான வாழ்க்கை முறையும் உணவு பழக்கமுமே காரணம். வேலை என்று ஓடி கொண்டிருக்கும் நாம் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த மறந்து விடுகிறோம். பசி எடுக்கும் நேரத்தில் சாப்பிடாமல், நேரம் கிடைக்கும் நேரத்தில் சாப்பிடுவதால் பிரச்சனைகள் வரும் பிரச்சனைகள் ஏராளம். அதில் ஒன்று தான் உடல் பருமன்

சரியான நேரத்தில் தூங்காதது சரியான நேரத்தில் சாப்பிடாதது ஆகியவை, உடல் பருமனுக்கு முக்கிய காரணம் என்கின்றனர் நிபுணர்கள். உடல் பருமன் பிரச்சனையில் இருந்து விடுபட யோகா நமக்கு கை கொடுக்கும். சில எளிய யோகாசனங்கள் மூலம் உடல் பருமனையும் தொப்பை கொழுப்பையும் எளிதாக கரைக்கலாம். ஒரு மாதத்திலேயே பலனை கண்கூடாக பெறலாம். உடல் பருமன் மற்றும் கொழுப்பை கரைக்கும் (Weight Loss Tips) பிரத்யேக யோகாசனங்களை அறிந்து கொள்ளலாம்.

விருக்ஷாசனம்

மரம் போன்ற நிலையில் நிற்கும் விருக்ஷாசனம் கொழுப்பை கரைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த ஆசனத்தை காலையில் வெறும் வயிற்றில் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆசனத்தை செய்ய முதலில் நேராக நிற்க வேண்டும். பின்னர் ஒரு பாதத்தை மற்றொரு பாதத்தின் தொடையின் மீது வைக்க வேண்டும். இரு கைகளையும் தலைக்கு மேலே தூக்கிக் கொண்டு வணக்கம் என்ற தோரணையில் கைகளை இணைத்து நிற்க வேண்டும்.

பாலாசனம்

பாலாசனம் தொப்பையை கரைத்து தசைகளை பலப்படுத்தும் சிறப்பான ஆசனம் ஆகும். யோகாசனம் செய்வதை புதிதாக தொடங்குவோம் தொடங்குபவர்களுக்கு இது மிகச் சிறந்த ஆசனம். உங்கள் முழு உடலும் குதிகாலின் மீது இருக்கும் படி முழங்காலை வளைத்து தரையில் உட்கார்ந்து கொள்ளுங்கள். உங்கள் மார்பு தொட வேண்டும். அதோட உங்கள் நெற்றியினால் தரையை தொட முயற்சிக்க வேண்டும். சில வினாடிகள் நீடித்து நின்றபின் இயல்பு நிலைக்கு வரவும். எனினும், முழங்கால் வலி இருப்பவர்கள் கர்ப்பிணிகள் ஆகியோர் இந்த ஆசனத்தை செய்யக்கூடாது என்று நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். 

மேலும் படிக்க | உடல் எடையை வேகமா குறைக்கும் பப்பாளி.. இன்னும் பல நன்மைகளும் இதில் இருக்கு

புஜங்காசனம்

கரைக்க மிகச் சிறந்த ஆசனம் ஆகும் இடுப்பு மற்றும் வயிற்றின் தசைகளை வலுப்படுத்தி உடல் கொழுப்பை இருக்கிறது. இந்த ஆசனத்தை செய்ய குப்புறப் படுத்துக்கொண்டு பாம்பு படம் எடுப்பது போல் உடலை வளைந்து நிமிர்ந்து தாசனத்தை செய்ய வேண்டும். உடலின் ஒவ்வொரு பகுதியும் இந்த ஆசனத்தில் பங்கே இருக்கிறது இது சர்பாசனம் என்றும் அழைக்கப்படுகிறது. குறிப்பாக இந்த ஆசனத்தில் கழுத்து கைகள் மார்பு போன்றவை வலிமை அடைகின்றன. புஜங்காசனத்தில் உடல் எடை குறைவதுடன் கூடவே பார்வையும் தெளிவாகிறது.

நௌகாசனம்

நௌகாசனம் என்பது படகு வடிவில் செய்யப்படும் வசனம் ஆகும். இந்த ஆசனம் செய்ய நேராக பருத்துக் கொண்டு இரு கைகளையும் தலைக்கு பின்னால் கொண்டு போக வேண்டும். இப்போது கைகளையும் கால்களையும் உயர்த்தி உடலை படகு போல் வளைக்க வேண்டும். இந்த ஆசனத்தில் உடல் எடை குறைவதோடு மட்டுமல்லாமல் உடலில் சேரும் நச்சுப் பொருட்களும் வெளியேறும்.

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | இந்த அறிகுறிகள் இருந்தால் ஜாக்கிரதை: இவைதான் நீரிழிவு நோயின் ஆரம்ப அறிகுறிகள்!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

Trending News