உலகின் சிறந்த தானங்களில் ஒன்று ரத்ததானம் ஆகும். இதனாலேயே இந்த நற்செயலை போற்றும் வகையில் ஜூன் 14ஆம் தேதி உலகம் முழுவதும் ரத்ததான தினம் கொண்டாடப்படுகிறது. விபத்தில் சிக்கியவர்களுக்கு, நோய் பாதிப்படைந்தவர்களுக்கு, அரிய வகை பாதிப்பிலிருப்பவர்களுக்கு என பலருக்கும் ரத்தம் தேவைப்படும். இதற்கென ஆங்காங்கே இரத்த வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. அவ்வப்போது தன்னார்வல தொண்டு நிறுவனங்களும் ரத்த தான முகாம்களை நடத்தி வருகிறது. பலருக்கு ரத்த தானம் செய்ய விருப்பம் இருந்தாலும், ஒரு சில காரணங்களால் அவர்களால் செய்ய முடியாமல் போயிருக்கலாம். அப்படி, யார் யாரெல்லாம் ரத்தம் கொடுக்கலாம் யார் யாரெல்லாம் கொடுக்கக்கூடாது என்று விவரத்தை இங்கு பார்ப்போம்.
யார் யாரெல்லாம் ரத்தம் கொடுக்கலாம்?
>இந்தியாவைப் பொறுத்தவரை 18 வயது முதல் 65 வயது வரை யார் வேண்டுமானாலும் ரத்தம் கொடுக்கலாம். ரத்தம் கொடுப்பவர்கள் 50 கிலோவிற்கு அதிகமாக இருப்பவர்களாக இருக்க வேண்டும்.
>ரத்த தானம் செய்பவர்கள், ரத்தம் கொடுக்கும் சமயத்தில் உடல் ஆரோக்கியத்துடன் இருப்பது அவசியம். எந்தவித நோய் பாதிப்பு மற்றும் தொற்று இல்லாமல் இருப்பவர்கள் ரத்தம் கொடுக்கலாம்.
>ரத்த தானம் கொடுப்பவர்களில் பெண்களுக்கு சராசரி ஹீமோகுளோபின் அளவு 12.5 g/dL இருக்க வேண்டும். ஆண்களை பொறுத்தவரை, 13.0 g/dL அளவு வரை இருக்கலாம்.
மேலும் படிக்க | சர்வதேச ரத்த தான தினம்... உதிரம் கொடுத்து உயிர்காப்போம்...!
>ரத்த தானம் செய்பவர்களின் நாடித்துடிப்பு மற்றும் இதயத்துடிப்பு சரியான அளவில் இருக்க வேண்டும். ரத்த அழுத்தமும் சராசரி அளவாக இருப்பது நல்லது.
>ஆண்கள் மூன்று மாதத்திற்கு ஒரு முறை ரத்தம் கொடுக்கலாம் என்றும் பெண்கள் நான்கு மாதத்திற்கு ஒரு முறை ரத்த தானம் செய்யலாம் என்றும் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.
யாரெல்லாம் ரத்தம் கொடுக்கக் கூடாது?
>நாள்பட்ட நோய் பாதிப்பு கொண்டவர்கள் ரத்தம் கொடுக்கக் கூடாது. உதாரணம்: புற்றுநோய், ஆஸ்துமா நோய் பாதிப்பு கொண்டவர்கள், இதய நோய் பாதிப்பு கொண்டவர்கள் உள்ளிட்டோர் ரத்தம் கொடுக்கக் கூடாது.
>எச்ஐவி அல்லது எய்ட்ஸ் நோய் பாதிப்பு கொண்டவர்கள் ரத்தம் கொடுக்கக் கூடாது. இந்த நோய்களைப் போல பாலியல் நோயான, heppatitis b அல்லது c நோய் பாதிப்பு கொண்டவர்கள், பிற பாலியல் சார்ந்த நூல் பாதிப்பு கொண்டவர்கள் ரத்தம் கொடுக்கக் கூடாது.
>மலேரியா நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அந்த நோய் வந்த மூன்று வருடங்கள் கழித்து தான் ரத்த தானம் செய்ய வேண்டும். தற்போது மலேரியா நோயினால் பாதிக்கப்பட்டவர்களும் ரத்த தானம் செய்ய முடியாது.
>உடலில் அறுவை சிகிச்சை செய்திருப்பவர்கள் ஆறு மாதத்திற்கு பிறகு தான் ரத்த தானம் செய்ய முடியும்.
>ரத்த மாற்றம் செய்தவர்கள், டாட்டூ குத்தியவர்கள் ரத்ததானம் செய்ய முடியாது.
>குழந்தை பெற்ற பெண்கள் சில வருடங்கள் கழித்தான் ரத்த தானம் செய்ய முடியும்.
>கர்ப்பம் தரித்திருக்கும் பெண்கள் ரத்த தானம் செய்ய முடியாது.
>தினமும் மருந்து மாத்திரை எடுத்துக் கொள்பவர்களால் ரத்த தானம் செய்ய முடியாது.
>போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையானவர்கள், மது அருந்துபவர்கள், பல்வேறு ஆட்களுடன் பாலியல் உறவு கொள்பவர்கள் போன்றோர் ரத்த தானம் செய்ய முடியாது.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | உலக ரத்த தான தினம் : ரத்தம் கொடுத்த பின் செய்ய வேண்டியவை-செய்ய கூடாதவை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ