குளிர்கால டிப்ஸ்: குழந்தைகளை ஆரோக்கியமாக வைப்பது எப்படி?

காது, மூக்கு, தொண்டையை குளிர் அதிகம் தாக்குகிறது. குளிர் காலத்தில் குழந்தைகளுக்கு தொற்று நோய்கள் எளிதில் தாக்குகிறது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 14, 2020, 04:14 PM IST
குளிர்கால டிப்ஸ்: குழந்தைகளை ஆரோக்கியமாக வைப்பது எப்படி? title=

காது, மூக்கு, தொண்டையை குளிர் அதிகம் தாக்குகிறது. குளிர் காலத்தில் குழந்தைகளுக்கு தொற்று நோய்கள் எளிதில் தாக்குகிறது. அவர்களிடம் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதுதான் காரணம்.

இரவு முதல் அதிகாலை வரை குளிரின் தாக்கம் அதிகம் இருப்பதால் இந்த நேரத்தில் மூச்சு திணறல், சளி என பிரச்னைகள் துவங்கும். நோய் எதிர்ப்பு சக்தி (Immunity) குறைவாக இருக்கும் பட்சத்தில் இதுவே காய்ச்சலாக மாறும். எனவே இந்த குளிர்காலத்தில் (Winter) குழந்தைகளை ஆரோக்கியமாக வைப்பது எப்படி என்று பார்போம். 

ALSO READ | Dry hair: குளிர்காலத்தில் கூந்தல் வறண்டு போய்விட்டதா? இதோ Tips

  • இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் குளிர் தாக்காத வண்ணம் காதுகளை மூடிக் கொள்ளலாம். 
  • குளிர் காலத்தில் அவ்வளவாகத் தாகம் எடுக்காது. ஆனாலும், போதிய அளவுக்குத் தண்ணீர் குடிக்க வேண்டும், தொண்டை வறண்டு போகாமல் பாத்துக்கொள்ள வேண்டும். வெந்நீர் அருந்துவது மிகவும் சிறந்தது.
  • குளிர்சாதனப் பெட்டியில் வைத்த உணவுப் பொருட்களை அப்படியே சாப்பிடுவதைத் தவிர்த்து தட்பவெட்பத்துக்கு அவை வந்ததும் சாப்பிட வேண்டும்.
  • உதடு வெடிப்பை தவிர்க்க நெய் அல்லது எண்ணெய்யை உதட்டில் பூசுங்கள். வறண்ட சர்மம் உள்ளவர்கள் வறட்சியை தடுக்க ஆலிவாயில் அல்லது தேங்காய் எண்ணெய் பூசி குளித்து வர சர்மம் சீராகும்.

ALSO READ | இந்த ஆண்டு குளிர் மிகவும் கடுமையாக இருக்க போவதன் காரணம் தெரியுமா..!!!

  • குளிர்காலத்தில் பிரச்சினைகளை தவிர்க்க, உணவில் கவனம் செலுத்த வேண்டும். காய்கறிகள், ஒமேகா 3 நிறைந்த மீன்கள், சிறுதானியங்கள், பாதாம், வேர்கடலை, தேன், போன்றவற்றை கூடுதலாக உணவில் சேர்த்துக்கொள்வதால் உடலில் உள்ள வெள்ளை ரத்த அணுக்கள் செயல் திறன் பெற்று, நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது. 

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News