இந்த கருப்பு மூலிகை ஒன்று போதும்.. நரை முடி நிமிடத்தில் மறந்துவிடும்

White Hair Treatment: நரை முடியை கருப்பாக்க மருதாணி மற்றும் இண்டிகோ பற்றி நீங்கள் அறிந்திருக்கிறீர்கள், ஆனால் இன்று நாம் நரை முடியை கருப்பாக்க பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்படும் ஒரு கருப்பு மூலிகை பற்றி தான் காண உள்ளோம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jun 4, 2023, 11:05 AM IST
  • உச்சந்தலையில் ஏற்படும் நோய்த்தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்கும்
  • முடியை கருப்பாக்கும் பேஸ்ட் செய்வது எப்படி
  • நரை முடி, பொடுகு முதல் முடி உதிர்வஉ வரை நிறுத்த உதவும்
இந்த கருப்பு மூலிகை ஒன்று போதும்.. நரை முடி நிமிடத்தில் மறந்துவிடும் title=

கெமிக்கல் டை பயன்படுத்துவதன் மூலம் நரை முடியை நிச்சயமாக கருப்பாக்க மாற்றிவிடலாம், ஆனால் இது பல நீண்ட காலத்திற்கு பல்வேறு பக்க விளைவுகளைக் கொண்டுள்ளது, பின்னர் நீங்கள் வருத்தப்படுவதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியாது. அதனால்தான் முடி நரைப்பதை மறைக்க இயற்கையான பொருட்களையே பயன்படுத்த வேண்டும் என்கின்றனர். இதில் சிறப்பு என்னவென்றால், இந்த இயற்கையான செயல்முறை உங்களுக்கு எவ்வித தீங்கும் விளைவிக்காது, மேலும் கெமிக்கல் ஹேர் டையை விட  சிறந்த பலனைத் தரும்.

அந்த வகையில் மருதாணி மற்றும் இண்டிகோ மட்டுமல்ல, மற்றொரு மூலிகையும் உள்ளது அவை உங்கள் தலைமுடியில் இருக்கும் வெள்ளை முடியை கருப்பாக் மாற்றாக்கூடும். இந்த மூலிகை பல நூற்றாண்டுகளாக முடியை கருமையாக்க பயன்படுத்தப்படுகிறது, ஆனால் தற்போது நவீன காலத்தில் மக்கள் இந்த மூலிகையை முற்றிலும் மறந்துவிட்டனர். இந்த மூலிகையின் சிறப்பு என்னவென்றால் இது முடியை கருப்பாக்குவது மற்றுமில்லாமல் அனைத்து விதமான கூந்தல் பிரச்சனைகளையும் குணப்படுத்தும் உதவும்.

மேலும் படிக்க | அசத்தும் ஆயுர்வேதம்: 5 பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு!!

நரை முடி, பொடுகு முதல் முடி உதிர்வஉ வரை நிறுத்த  உதவும்

நாம் மேலே பேசிக்கொண்டு இருந்த மூலிகை வெறும் ஒன்றும் இல்லை இது பிரிங்ராஜ் எண்ணெய் ஆகும். இது ஒரு உன்னதமான ஆயுர்வேத முடி டானிக் ஆகும், இது முடி உதிர்தல், நரை முடி மற்றும் பொடுகு ஆகியவற்றிற்கு மிகவும் நன்மை பயக்கும். அத்துடன் இது கூந்தலுக்கு நன்மை செய்வதைத் தவிர, தோல் பிரச்சினைகள், தலைவலி மற்றும் மன பலவீனம் ஆகியவற்றிற்கும் பயனுள்ளதாக இருக்கும். அதுமட்டுமின்றி இந்த பிரிங்ராஜ் எண்ணெயுடன் முடியை மசாஜ் செய்வது ஒற்றைத் தலைவலியில் இருந்து நிவாரணம் அளிக்கிறது, இந்த எண்ணெய் நினைவாற்றலை அதிகரிக்கிறது மற்றும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.

நரை முடியை கருப்பாக மாற்றுவதற்கான செய்முறையை தெரிந்து கொள்ளுங்கள்
பிரிங்ராஜ் ஹேர் ஆயில் மற்றும் அதன் இலைகளால் செய்யப்பட்ட பேஸ்ட் உங்கள் நரை முடியை கருப்பாக மாற்றும். எனவே பிரின்ராஜ் எண்ணெய் மற்றும் ஹேர் கலர் பேஸ்ட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

முடியை கருப்பாக்கும் பேஸ்ட் செய்வது எப்படி
பிரிங்ராஜ் பொடியில் கடுக்காய் மற்றும் ஜாதமாசியை மருதாணி பொடியில் கலந்து இரவு முழுவதும் ஊறவைக்கவும். அடுத்த நாள் இந்த பேஸ்ட்டை தலைமுடியில் தடவி 1 முதல் 1.5 மணி நேரம் வைத்திருந்து வெதுவெதுப்பான வெந்நீரில் கழுவவும். அதன் பிறகு, பிரின்ராஜ் எண்ணெயை தலைமுடிக்கு தடவவும்.

உச்சந்தலையில் ஏற்படும் நோய்த்தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்கும்
பிரிங்ராஜில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளின் நன்மை, பல்வேறு வகையான உச்சந்தலை நோய்த்தொற்றுகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான விரைவான தீர்வாக அமைகிறது. முதன்மையாக பிரிங்ராஜ் எண்ணெய் பல்வேறு வகையான ஃபோலிகுலிடிஸ் சிகிச்சையில் பயனுள்ளதாக இருக்கிறது, இது ஸ்டேஃபிளோகோகஸ் ஆரியஸ் தொற்று காரணமாக ஏற்படுகிறது மற்றும் மயிர்க்கால்களில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது, இது இறுதியில் முடி உதிர்தல் மற்றும் வழுக்கைக்கு வழிவகுக்கிறது. இது டைனியா கேபிடிஸ் மூலம் உச்சந்தலையில் ஏற்படும் ரிங்வோர்ம் தொற்றுக்கும் சிகிச்சையளிக்கிறது. இந்த அற்புத எண்ணெயை தொடர்ந்து பயன்படுத்துவதால் மயிர்க்கால்களின் வீக்கத்தைக் குறைக்கிறது, உச்சந்தலையின் மென்மையைக் குறைக்கிறது, உச்சந்தலையில் அரிப்பு குறைகிறது மற்றும் முடி வளர்ச்சியை அதிகரிக்கச் செய்கிறது.

பிரின்ராஜ் எண்ணெய் தயாரிப்பது எப்படி?
2560 கிராம் - பிரிங்ராஜ் சாறு

640 கிராம் - நெல்லிக்காய் சாறு

640 கிராம் - நீர்ப்பிரமி சாறு

மூலிகைகள் சேர்த்து பதமாக தயாரிக்கப்பட்டு சூரியனின் நேரடி பார்வையில் வைத்து பக்குவப்படுத்தி தயாரிக்கப்படுகிறது. இதை சாதாரணமாகவே கூந்தலில் பயன்படுத்தும் போது இது உச்சந்தலை ஆரோக்கியத்தில் தன் முதல் பணியை தொடங்குகிறது.

வழக்கமாக கூந்தலுக்கு எண்ணெய் தடவும் போது இந்த எண்ணெயை விரல்களில் தோய்த்து மசாஜ் செய்து வந்தால் முடி வளர்ச்சி நிச்சயம்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | ஜாக்கிரதை! Vitamin C குறைபாடு இருந்தால் உடலில் இந்த பிரச்னைகள் வரும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News