வெள்ளை முடியை கருமையாக்க இந்த மூலிகை ஆயிலை பயன்படுத்துங்கள்

White Hair Treatment: கூந்தலை கருமையாக்க பல பொருட்கள் சந்தையில் கிடைத்தாலும், சிறிது எண்ணெய் தடவினால், முன்கூட்டிய நரைத்த முடியை கருப்பாக்கலாம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 30, 2022, 06:39 AM IST
  • வெள்ளை முடி ஏன் ஏற்படுகிறது
  • முடியை கருப்பாக்க மூலிகை எண்ணெய்
  • மெலனினானது வயதாக ஆகத் தான் குறைய ஆரம்பிக்கும்
வெள்ளை முடியை கருமையாக்க இந்த மூலிகை ஆயிலை பயன்படுத்துங்கள் title=

வெள்ளை முடி இருப்பது இயல்பானது, ஆனால் உங்கள் தலைமுடி இளம் வயதிலேயே வெள்ளையாக மாற ஆரம்பித்தால், அது அவர்களுக்கு டென்ஷனாக்கி விடும். அதன்படி இந்த தொல்லையில் இருந்து விடுப்பட மக்கள் பல விதமான டிப்ஸ்களை ட்ரி செய்கின்றனர். எனவே இத்தகையவர்களுக்கு சில எண்ணெய்கள் உள்ளன, அதன் உதவியுடன் உங்கள் தலைமுடியை மீண்டும் கருப்பாக்கிக்கொள்ளலாம். அது தேங்காய் எண்ணெய் ஆகும். இருப்பினும், இந்த எண்ணெயை தனியாகப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, மருதாணி இலைகளைப் போட்டு பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் பயனடையலாம். 

வெள்ளை முடி ஏன் ஏற்படுகிறது
பொதுவாக நரைமுடி வருவதற்கு மருத்துவரீதியாக முன்மையான காரணம் என்னவென்றால், முடிக்கு கருப்பு நிறத்தை வழங்கும் மெலனின் என்னும் நிறமி குறைவாக இருப்பது தான். இந்த மெலனினானது வயதாக ஆகத் தான் குறைய ஆரம்பிக்கும். ஆனால் தற்போது இந்த மெலனின் சிறு வயதினருக்கே குறைய ஆரம்பித்து நரைமுடியை ஏற்படுத்திவிடுகிறது.

எனவே மருதாணி கலந்த தேங்காய் எண்ணெய் எப்படி முடியில் தடவலாம் என்பதை இங்கே விரிவாக தெரிந்துக்கொள்ளுங்கள். எனவே அதன் செயல்முறை என்ன என்பதை அறியலாம்.

மருதாணி இலைகளை தேங்காய் எண்ணெயுடன் கலக்கவும்
மருதாணி இலையை தேங்காய் எண்ணெயுடன் தடவி வந்தால் பலன் நிச்சயம் கிடைக்கும். இதைப் பயன்படுத்துவதன் மூலம், உங்கள் தலைமுடி வேரில் இருந்து கருப்பாக மாறத் தொடங்கும். இதற்கு முதலில் 3-4 ஸ்பூன் தேங்காய் எண்ணெயைக் கொதிக்க வைக்க வேண்டும். இதற்குப் பிறகு, அதில் மருதாணி இலைகளை சேர்க்கவும். சிறிது நேரம் கழித்து எண்ணெயை பொன்னிறமாகும் வரை கொதிக்க வைக்கவும். இந்த செயல்முறைக்குப் பிறகு, முடி குளிர்ந்த பிறகு, முடியின் வேர்களில் இந்த மூலிகை எண்ணெயை தடவவும். குறைந்தபட்சம் 40 நிமிடங்களுக்கு இந்த எண்ணெயை உங்கள் தலையில் ஊற வைத்து கழுவவும். இந்த செயல்முறையை தொடர்ந்து செய்து வந்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்.

கடுகு எண்ணெய் முடியை கருப்பாக்கும்
இது தவிர கடுகு எண்ணெயால் கூந்தலும் கருப்பாக மாறும். எனவே, முதலில் நீங்கள் இரும்பு சட்டியை அடுப்பில் வைத்து அதில் கடுகு எண்ணெய் ஊற்றி குறைந்த தீயில் சூடாக்கவும். எண்ணெய் ஒரு கொதி வரும் வரை வைக்கவும். எண்ணெய் முற்றிலும் கருப்பாக மாறியதும், அதில் மருதாணியி இலைகளை போடவும், பின்னர் கேஸ்ஸை அணைக்கவும். இந்த எண்ணெய் குளிர்ந்த பிறகு, அதை உங்கள் தலைமுடியில் தடவலாம். இதனால் கூந்தல் கருப்பாக மாறுவது மட்டுமின்றி வலுப்பெற்று பளபளக்கும்.

Trending News