சருமத்தை மினுமினுக்கச் செய்யும் எண்ணெய்! கண்களின் கருவளையத்தைப் போக்கும் கடலையெண்ணெய்

Healthy Oil for cooking: உடலுக்குள் உள்ள உறுப்புகளுக்கு எவ்வளவு சத்துக்கள் அவசியமோ அதுபோகல உடலின் மேல் பகுதியில் உள்ள சருமத்திற்கும் ஊட்டச் சத்துக்கள் அவசியம்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Dec 29, 2023, 06:14 PM IST
  • சருமத்திற்கு ஊட்டத்தை அளிக்கும் விட்டமின் ஈ
  • தோல் நோய்கள் ஏற்படாமல் தடுக்கும் சமையல் எண்ணெய்
  • நிலக்கடலையில் இருந்து எடுக்கப்படும் கடலையெண்ணெய்
சருமத்தை மினுமினுக்கச் செய்யும் எண்ணெய்! கண்களின் கருவளையத்தைப் போக்கும் கடலையெண்ணெய் title=

கடலை எண்ணெய் நன்மைகள்: சமையலில் பயன்படுத்தப்படும் ஆரோக்கியமான எண்ணெய்களில் கடலை எண்ணெயும் ஒன்று. இது உணவுகளை தயாரிக்க, அதிலும் குறிப்பாக பொரிக்க பயன்படுகிறது. நிலக்கடலையில் இருந்து தயாரிக்கப்படும் இந்த எண்ணெயை கடலை எண்ணெய் என்றும் அழைக்கின்றனர். வேர்க்கடலை விதைகளிலிருந்து பெறப்படும் இந்த சமையல் எண்ணெய் பொதுவாக ஆசிய நாடுகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. உடலுக்குள் உள்ள உறுப்புகளுக்கு எவ்வளவு சத்துக்கள் அவசியமோ அதுபோகல உடலின் மேல் பகுதியில் உள்ள சருமத்திற்கும் ஊட்டச் சத்துக்கள் அவசியம். அதைக் கொடுப்பதில் சத்து மிகுந்த கடலை எண்ணெய் பட்டியலில் முக்கியமான இடத்தைப் பிடிக்கிறது.  

கடலை எண்ணெய்

கடலை எண்ணெய் என்பது வேர்கடலையை நசுக்கி வடிகட்டி எடுக்கப்படும் எண்ணெய் ஆகும். இதில் போலிக் அமிலம் அதிகம் உள்ளது. இதிலுள்ள வைட்டமின் ஈ சருமத்திற்கு மிகவும் நல்லது.

சருமத்தை பாதுகாக்கும் கடலை எண்ணெய்

பெரும்பாலான அழகு சாதனப் பொருட்களில் குறிப்பாக கிரீம்களில் வைட்டமின் இ எண்ணெய் சேர்த்திருப்பார்கள். கடலை எண்ணெயில் இயற்கையாகவே ஆன்டி ஆக்சிடன்ட்கள் அதிக அளவு இருப்பதன் காரணமாக சரும பராமரிப்புக்கு இது மிகவும் நல்லதாக கருதப்படுகிறது. பாலிபீனால் என்ற ஆன்டி ஆக்ஸிடன்ட் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. இளமைத் தோற்றத்தை நீண்ட நாட்கள் பராமரிக்கிறது.

மேலும் படிக்க | அற்புத பலன் தரும் குளிர்காலக் கீரை! கடுகுக்கீரை கூட்டு சாப்பிட்டால் நோய்கள் ஓடிப்போகும்

சருமச் சுருக்கம்

இளமையிலேயே வயதான தோற்றம் ஏற்படக் காரணமாக உள்ள பிரிராடிக்கல்களைத் தடுக்கும் வைட்டமின் இ எண்ணெயைப் பயன்படுத்தும் பொழுது தோல் சுருக்கம், தோல் வறட்சி, வெடிப்பு போன்றவை ஏற்படுவதில்லை. சருமத்தின் பளபளப்பும் ஆரோக்கியமும் அதிகரிக்கிறது.

காயங்கள் தழும்புகள் காணாமல் போகும்

தழும்புகள், பருக்களை குணப்படுத்த உதவும் கடலை எண்ணெய், சரும எரிச்சல் இன்றி எண்ணெய்ப்பசையை தோல் தக்க வைத்துக் கொள்ள உதவுகிறது.

கண்களின் கருவளையத்தைப் போக்கும் கடலையெண்ணெய்

கண்களைச் சுற்றிக் காணப்படும் கருவளையத்தை குறைக்க வைட்டமின் இ எண்ணெயை சுற்றி தடவி வர வேண்டும். இமை முடிகளின் மீது எண்ணெயை சிறிது தடவி வர இமை முடியும் வளரும். சருமம் வறண்டு போனாலும் அதற்கு கடலை எண்ணெய் பயன்பாடு பயன் தரும்.

சருமப்பொலிவுக்கு கடலையெண்ணெய்

சருமம் எப்போதும் ஈரத்தன்மையுடனும் மிருதுவாக அமையவும், எக்ஸிமா, சோரியாஸில் போன்ற சரும நோயினால் சருமப் பாதிப்பு உள்ளவர்களும் வைட்டமின் இ எண்ணெயை பயன்படுத்தி வர பலன் கிடைக்கும்.

ரத்த விருத்திக்கு கடலை எண்ணெய்

போலிக் அமிலம் குறைவாக இருந்தால் இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு குறைந்து விடும். ஹீமோகுளோபின் அளவு குறைந்தால் சிவப்பு இரத்த அணுக்களின் அளவு குறைந்து விடும். இரத்த சிவப்பணுக்களில் உள்ள இரும்புச் சத்துக் குறைவதால் இரத்த சோகை நோய் ஏற்படும். மேலும், போலிக் அமிலம் கர்ப்பம் தரித்த பெண்களுக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். தினமும் தவறாது கடலை எண்ணெய் பயன்படுத்தி வந்தால், ரத்தசோகை ஏற்படாது.

மேலும் படிக்க | மூளை முதல் இதயம் வரை....  சூப்பர்புட் எள்ளை மிஸ் பண்ணாம சாப்பிடுங்க!

நீரிழிவு நோய் ஏற்படுவதை தடுக்கும் கடலையெண்ணெய்

நீரிழிவு நோய் ஏற்படுவதை தடுக்கும் மாங்கனீசு சத்து அதிகம் கொண்ட கடலை எண்ணெயில், ரெஸ்வாரட்ரால் என்ற சத்து இதய வால்வுகளைப் பாதுகாக்கிறது. இதனால், நீரிழிவு மற்றும் இதய நோய்கள் ஏற்படும் அபாயம் குறைகிறது. 

நியாசின் அதிகம் கொண்ட கடலையெண்ணெய்

கடலை எண்ணெயில் உள்ள நியாசின் சத்து மூளை வளர்ச்சி, ஞாபகச் சக்தி அதிகரிக்க உதவுகிறது. ஒமேகா 6 கொழுப்பு எண்ணெய்  நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகமாக தருகிறது. மார்பகக் கட்டி, புற்று நோய் ஏற்படுவதைத் தவிர்க்கிறது. பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பைக் கட்டி, நீர்க்கட்டிகள் ஏற்படுவதையும் தடுக்கிறது.

(பொறுப்புத் துறப்பு- இந்த கட்டுரை இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. இதை ஒரு சுகாதார நிபுணரின் கருத்தாக கருத வேண்டாம். உடல் நலம் தொடர்பான எந்த  பிரச்சனைகளுக்கும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | Diabetic Diet: குளிர்காலத்தில் நீரிழிவு நோயாளிகள் உண்ண வேண்டிய கீரை வகைகள்

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News