Healthy Drink: உடலுக்கு குளுமை தருவது பீரா? மோரா?

பீர், மோர் இரண்டுமே ஆரோக்கியத்திற்கு சிறந்த பானங்கள். இரண்டுமே புளிக்க வைத்து உருவாக்கப்படுபவை என்றாலும், இரண்டில் எது நல்லது?

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 23, 2021, 02:23 PM IST
  • பீர், மோர் இரண்டுமே சிறந்த பானங்கள்
  • இரண்டுமே புளிக்க வைத்து உருவாக்கப்படுபவை
  • இரண்டில் எது சிறந்தது?
Healthy Drink: உடலுக்கு குளுமை தருவது பீரா? மோரா?  title=

மனிதர்களுக்கு அருமையான நற்பயன்களை வழங்கும் மோர் பல்வேறு நோய்களைக் குணப்படுத்த உதவுகிறது. பீர்,  பார்லி, கோதுமை, சோளம், அரிசி உள்ளிட்ட தானியங்களிலிருந்து பெறப்பட்ட மாவுப் பொருளை நொதிக்கச் செய்து தயாரிக்கப்படுகிறது.

பீர், மோர் இரண்டுமே நொதித்தல் முறையால் உருவாக்கப்படுபவை, உடலுக்கு குளிர்ச்சி தருபவை. ஆனால், மோரா? பீரா? என்றால் இரண்டும் என்று சொல்லக்கூடாது. இரண்டையும் ஒரே நாளில் சாப்பிடுவது எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும்.

கால்சியம் சத்தை கொண்டுள்ள மோர் (Calcium rich in Buttermilk) வயிற்றில் ஏற்படும் எரிச்சல், நீரிழப்பு ஆகியவற்றைச் சரிசெய்யும். உடலில் உள்ள தேவையற்ற நச்சுகளை வெளியேற்றும். 

பீர் குடித்தால் ஆரோக்கியக் குறைவு ஏற்படாது உடலுக்கு எந்தத் தீங்கும் ஏற்படாது என்பதனால் தான், இந்தியாவில் சுமார் 30% மக்கள் பீர் சாப்பிடுகிறார்கள். பிற மது பானங்களைவிட பீர் அதிக அளவில் அருந்தப்படுகிறது.

Also Read | 2021ல் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவு பிரியாணி! நிமிடத்திற்கு 115 ப்ளேட்

பீர் பானத்தில் ஆல்கஹால் அளவு குறைவாக இருந்தாலும், அதுவும் உடல் ஆரோக்கியத்திற்கு கேடு ஏற்படுத்துகிறது.செரிமானத்தை எளிதாக்கும் மோர், கொழுப்பைக் குறைக்கிறது. வாய்ப்புண், வயிற்றுப்புண் என உடலின் உள்ளுறுப்புகளில் ஏற்படும் புண்களையும் சரிசெய்யும். மூலநோயைக் குணப்படுத்த உதவும். 

பீர் அதிகமாக குடிக்கும் ஆண்களுக்கு பாலியல் ஹார்மோன்கள் பாதிப்பும் ஏற்படும். ஆனால், மோர் குடிக்கும் ஆண்களுக்கு பாலியல் ஹார்மோன்கள் பாதிப்பு சரியாகிறது.

பீர் (Beer) உலகின் பழமைவாய்ந்த பானமாக இருந்தாலும், அது மது வகைகளில் ஒன்றாக இருக்கிறது.  மிக அதிகமாக பீர் அருந்தும் ஆண்களுக்கு, தந்தையாகும் வாய்ப்பு 50 சதவீதம் குறைவதாக அண்மை ஆராய்ச்சி ஒன்று கூறுகிறது. 

எனவே, உடல் சூட்டை குறைக்க தேவையானது பீரா? மோரா? என்ற பட்டிமன்றத்தில் வெற்றிப் பெறுவது மோர் தான்...

ALSO READ | Migraine: ஒற்றை தலைவலியை ஓட விரட்டும் ‘5’ சூப்பர் உணவுகள்..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News