இஞ்சி சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள்: இஞ்சி நமது சமையலறையின் முக்கியமான பொருளாகும். இஞ்சியை பயன்படுத்தினால உணவின் சுவை நன்றாக இருக்கும். இஞ்சி ஆயுர்வேதத்தில் மருந்தாகவே பார்க்கப்படுகிறது. பல வகையான நோய்களிலிருந்து நிவாரணம் பெற பயன்படுகிறது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சக்தி கொண்டது இஞ்சி. சளி, இருமல் மற்றும் காய்ச்சலில் இருந்து நிவாரணம் பெற இஞ்சியை தேநீராக குடிப்பது வழக்கம்.
அதேபோல, உடல் எடையைக் குறைப்பதிலும் இஞ்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இஞ்சியில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உடலில் நல்ல விளைவுகளை ஏற்படுத்துகின்றன. இஞ்சியை உட்கொள்வது செரிமானத்தை மேம்படுத்துகிறது, பசியைக் குறைக்கிறது மற்றும் கொழுப்பை எரிக்கத் தொடங்குகிறது என இஞ்சியின் நன்மை பயக்கும் குணங்களின் பட்டியல் நீளமானது.
இஞ்சியில் எவ்வளவு நன்மைகள் இருந்தாலும், அதிகமாக சாப்பிட்டால் அது உடல்நலனை கெடுத்துவிடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
அதிகமாக இஞ்சி சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்
இரைப்பை குடல் பாதிப்பு
அதிகப்படியான இஞ்சியை உட்கொள்வது நெஞ்செரிச்சல், வாயு மற்றும் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட வயிற்றுப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். இஞ்சியின் காரமான தன்மை, இரைப்பை குடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதால் அளவுடன் இஞ்சியை பயன்படுத்தி, அதன் பூரண நன்மைகளைப் பெறுவது நல்லது.
மேலும் படிக்க | நீரிழிவு நோயாளிகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 5 'சூப்பர்' உணவுகள்
இரத்தத்தின் அடர்த்தி குறைந்து மெலிதாவது (Thin blood)
ரத்தத்தின் அடர்த்தி குறைவதை, இரத்தம் மெலிவது என்று அறியப்படுகிறது. அதாவது ரத்தத்தின் பிளேட்லெட்டுகள் குறைவதை இது குறிக்கிறது, இரத்தத்தின் ஒரு பகுதி மெலிவதால், காயம் ஏற்பட்டால் ரத்தப்போக்கு அதிகமாக இருக்கும்.
இரத்தத்தில் நான்கு முக்கிய கூறுகள் உள்ளன: பிளாஸ்மா, சிவப்பு இரத்த அணுக்கள், வெள்ளை இரத்த அணுக்கள் மற்றும் பிளேட்லெட்டுகள். பிளேட்லெட்டுகள் சிறிய செல்கள், அவை ஒன்றுடன் ஒன்று சேர்ந்து இரத்தம் உறைவதற்கு உதவுகின்றன. குறைந்த எண்ணிக்கையிலான பிளேட்லெட்டுகள் இருப்பவர்களின் ரத்தம் மெலிவதை, த்ரோம்போசைட்டோபீனியா (thrombocytopenia) என்று குறிப்பிடுகின்றனர்.
இஞ்சியில் இரத்தத்தை மெலிக்கும் தன்மை கொண்ட கலவைகள் உள்ளன. எனவே, அதை அதிக அளவு உட்கொள்வது இரத்தப்போக்கு அபாயத்தை அதிகரிக்கும். ஏற்கனவே இரத்தத்தை மெலிக்கும் மருந்தை உட்கொள்பவர்கள் இஞ்சி சாப்பிடுவது நல்லதல்ல.
இரத்த அழுத்தம் குறைவது
இஞ்சியை அதிகமாக சாப்பிட்டால் இரத்த அழுத்தம் குறையலாம். இது ஒருவருக்கு பலவீனத்தை ஏற்படுத்துவதுடன், மயக்கம் அல்லது தலைச்சுற்றலை ஏற்படுத்தக்கூடும்.
ஒவ்வாமை எதிர்வினைகள்
இஞ்சியை உணர்திறன் கொண்டவர்கள், அதை அதிகமாக சாப்பிட்டால், சரும அரிப்பு மற்றும் சுவாசிப்பதில் சிரமம் உள்ளிட்ட ஒவ்வாமை எதிர்வினைகளை எதிர்கொள்ளலாம்.
நெஞ்செரிச்சல்
இஞ்சியில் காரமான பண்புகள் காணப்படுகின்றன, அதனால்தான் இதை அளவுக்கு மேல் சாப்பிட்டால், நெஞ்செரிச்சல் அல்லது அமில சுரப்பு அதிகரிக்கலாம்.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | PCOS பெண்கள் உடல் எடையை குறைக்க காலையில் இந்த பானங்களை குடித்தால் போதும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ