ஜாலியா தொந்தியை குறைக்கலாம்! சாப்பிட்டுகிட்டே ஒல்லியாகலாம்

Weight Loss With Dry Fruits: உங்கள் உடல் எடையை குறைக்கும் ஆரோக்கியமான காலை பழக்க வழக்கங்கள். இவை எடை குறைப்புக்கு சிறப்பான பழக்கங்கள் ஆகும்.

Written by - Malathi Tamilselvan | Last Updated : Oct 11, 2022, 02:51 PM IST
  • உடல் எடையை குறைக்கும் ஆரோக்கியமான காலை பழக்க வழக்கங்கள்
  • இவை எடை குறைப்புக்கு சிறப்பான பழக்கங்கள்
  • நல்ல உணவுமுறை உடல் எடையைக் குறைக்க உதவும்
ஜாலியா தொந்தியை குறைக்கலாம்! சாப்பிட்டுகிட்டே ஒல்லியாகலாம் title=

Weight Loss With Dry Fruits: பரபரப்பான வாழ்க்கை மற்றும் மோசமான வாழ்க்கை முறை காரணமாக, பெரும்பாலான மக்களின் உடல் பருமனாக மாறி, பல முயற்சிகளுக்குப் பிறகும் உடல் எடையைக் குறைக்க முடியாமல் தவிக்கின்றனர். நீங்களும் உடல் எடையை குறைக்க முயற்சிக்கிறீர்கள் என்றால், அதற்கான சுலபமான ஆனால் ஆக்கப்பூர்வமான வழிகளை பின்பற்றுங்கள். தினசரி காலையில் பின்பற்ற வேண்டிய மூன்று பழக்கங்கள், உங்கள் உடல் எடையை குறைக்கும். இவை ஆரோக்கியமான எடை குறைப்புக்கு சிறப்பான பழக்கங்கள் ஆகும்.

காலையில் எழுந்தவுடன் முதலில் உடலை ஹைட்ரேட் செய்வது மிகவும் முக்கியம், ஏனென்றால் நாம் தூங்கும் நேரத்தில் நீண்ட நேரம் தண்ணீர் குடிக்கவோ சாப்பிடவோ மாட்டோம். உடலை நீரேற்றமாக வைத்திருப்பது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. இதனால், உடலில் இருக்கும் அதிக கலோரிகளும் செலவாகும்.

காலையில், சாதாரண தண்ணீரைக் குடிக்கலாம். அதைத் தவிர, எலுமிச்சை-தண்ணீர், சீரகம், கேரம் விதைகள் அல்லது ஆளிவிதை தண்ணீரையும் எடுத்துக் கொள்ளலாம்.

மேலும் படிக்க | Oats For Weight Loss: உடல் எடையை குறைக்க ஓட்ஸை எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா? 

தினமும் 15-20 நிமிடங்கள் நடக்கவும் அல்லது உடற்பயிற்சி செய்யவும்

நமது உடல் செயல்பாடு என்பது, எடை இழப்புக்கு மிகவும் முக்கியமானது, எனவே நீங்கள் எடை இழக்க விரும்பினால், தினமும் காலையில் 15-20 நிமிடங்கள் நடக்கவும் அல்லது உடற்பயிற்சி செய்யவும். இதனை, ஒருபோதும் தவிர்க்காதீர்கள். காலையில் நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சி செய்வது அதிக கலோரிகளை எரிக்க உதவுகிறது. 

உடற்பயிற்சி செய்வது இரத்த சர்க்கரை அளவை நாள் முழுவதும் சீராக வைக்க உதவும். இது தவிர, நீங்கள் விரும்பினால், தியானம், யோகா அல்லது எந்தவித பயிற்சியையும் செய்யலாம்.

மேலும் படிக்க | தேனுடன் வாழை சேர்ந்தால் தித்திக்கும் அழகு! இது உலக அழகியாக ஆரோக்கிய டிப்ஸ்

ஊறவைத்த உலர் பழங்களை சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்

பல நேரங்களில், உடலில் புரதம், வைட்டமின்கள் அல்லது ஊட்டச்சத்துக்கள் இல்லாததாலும் எடை கூட தொடங்குகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? எனவே உடல் எடையை குறைக்க விரும்பினால், காலையில் ஊறவைத்த உலர் பழங்களை சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். உலர் பழங்களை உணவில் சேர்த்துக்கொள்வது பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் குறைபாட்டை நீக்குகிறது.

ஆரோக்கியமாக உடல் இருக்கும்போது அழகும் தானாகவே வந்து உங்களிடம் குடியேறும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | இள நரை பிரச்சனையா... உங்கள் டயட்டில் சேர்க்க வேண்டிய ‘முக்கிய’ உணவுகள்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News