தொங்கும் தொப்பையை கச்சிதமா கட்டுப்படுத்தும் கற்றாழை ஜூஸ்: இப்படி சாப்பிடலாம்

Weight Loss Tips:தொப்பை கொழுப்பை (Belly Fat) அகற்ற கற்றாழை ஜெல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் இந்த கற்றாழை ஜெல்லை எப்படி பயன்படுத்துவது என்பது பற்றி மக்கள் தெரிந்து கொள்வது அவசியம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 4, 2024, 09:27 AM IST
  • கற்றாழை பொதுவாக அழகு சார்ந்த பிரச்சனைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.
  • கற்றாழை இலைகளில் இருந்து ஒரு வெள்ளை ஒட்டும் பொருள் வெளிவருகிறது.
  • இது அலோ வேரா ஜெல் என்று அழைக்கப்படுகிறது.
தொங்கும் தொப்பையை கச்சிதமா கட்டுப்படுத்தும் கற்றாழை ஜூஸ்: இப்படி சாப்பிடலாம் title=

Weight Loss Tips: உடல் பருமன் என்பது இந்நாட்களில் மிகவும் பொதுவான பிரச்சனையாகிவிட்டது. தவறான உணவுப் பழக்கம், உடற்பயிற்சியின்மை, மன அழுத்தம் போன்ற காரணங்களால் பெரும்பாலானோர் உடல் பருமனை எதிர்கொள்கின்றனர். உடல் பருமன் அல்லது அதிகரிக்கும் எடை ஒரு நபரின் முழு ஆளுமையையும் கெடுத்துவிடுகிறது. இதனால், பலரது தன்னம்பிக்கையும் நிலைகுலைந்து விடுகிறது. இது தவிர உடல் எடை அதிகரிப்பதால் இன்னும் பல நோய்களும் நம்மை ஆட்கொள்ளத் தொடங்குகின்றன. 

ஆகையால், உடல் எடையை சரியான அளவில் பராமரிப்பது மிகவும் அவசியமாகும். எடையை குறைகக் பெரும்பாலும் மக்கள் பல வித முயற்சிகளை எடுக்கிறார்கள். சிலர் ஜிம் சென்று கடுமையான உடற்பயிற்சிகளை செய்கிறார்கள், சிலர் உணவு கட்டுப்பாடுகளை மேற்கொள்கிறார்கள். ஆனால், அனைவருக்கும் இது சாத்தியமில்லை. சில எளிய இயற்கையான வழிகளிலும் நாம் நம் உடல் டையை குறைக்கலாம். அப்படி ஒரு இயற்கையான வழியை பற்றி இந்த பதிவில் காணலாம். 

உடல் எடையை குறைக்க கற்றாழை (Weight Loss With Aloe Vera):

கற்றாழை பொதுவாக அழகு சார்ந்த பிரச்சனைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. கற்றாழை இலைகளில் இருந்து ஒரு வெள்ளை ஒட்டும் பொருள் வெளிவருகிறது. இது அலோ வேரா ஜெல் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஜெல்லில் பல ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. அதனால்தான் இதை உட்கொள்வது பல நன்மைகளை அளிக்கும்.

தொப்பை கொழுப்பை (Belly Fat) அகற்ற கற்றாழை ஜெல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் இந்த கற்றாழை ஜெல்லை எப்படி பயன்படுத்துவது என்பது பற்றி மக்கள் தெரிந்து கொள்வது அவசியம். கற்றாழை ஜெல்லை (Aloe Vera Gel) பயன்படுத்தி தொப்பை கொழுப்பையும் உடல் எடையையும் எவ்வாறு குறைப்பது என்பது பற்றி இந்த பதிவில் காணலாம். 

தொப்பை கொழுப்பை குறைப்பது எப்படி? (How to Reduce Belly Fat)

- தொப்பை கொழுப்பை நீக்க, கற்றாழை ஜெல்லை (Aloevera Juice) வெந்நீருடன் சேர்த்து உட்கொள்ளலாம். இதனால் உடல் எடையையும் (Weight Loss) வேகமாக குறைக்கலாம். இதற்கு ஒரு ஸ்பூன் கற்றாழை ஜெல்லை வெந்நீரில் சேர்த்து நன்கு கலக்கவும். இதனால் வயிற்று கொழுப்பை நீக்கலாம்.

மேலும் படிக்க | மலச்சிக்கலுக்கு முக்கிய காரணமாகும்... ‘சில’ ஆபத்தான பழக்கங்கள்!

- கற்றாழை ஜெல்லை எலுமிச்சை சாறுடன் சேர்த்து சாப்பிட்டாலும், தொப்பை குறையும். இதை செய்ய, முதலில் கற்றாழை (Aloe Vera) இலைகளை நன்கு கழுவுங்கள். அதன் பிறகு அந்த ஜெல்லை எடுத்து ஒரு கிளாஸ் தண்ணீரில் கலக்கவும். இப்போது கலவையில் எலுமிச்சை சாறு (Lemon Juice) சேர்த்து அதை உட்கொள்ளவும். இவ்வாறு செய்வதன் மூலம் தொப்பையை எளிதில் அகற்றலாம்.

- கற்றாழை ஜெல்லை உணவுக்கு முன் உட்கொண்டால், அதன் மூலம் வளர்சிதை மாற்றத்தை விரைவுபடுத்தலாம். மேலும் வயிற்றில் படிந்திருக்கும் அதிகப்படியான கொழுப்பையும் இதன் மூலம் நீக்க முடியும். கற்றாழை ஜெல் சாற்றை சாப்பிடும் முன் குடித்து வந்தால், அது செரிமான அமைப்பையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

- அலோ வேரா ஜெல் மற்றும் கிலோய் இரண்டும் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஒரு டம்ளர் வெந்நீரில் ஒரு ஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் ஒரு ஸ்பூன் கிலோய் சாறு கலந்து காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டால், வயிற்றுக்கு பல நன்மைகள் கிடைக்கும்.

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | எலும்பு வலி, பலவீனம், சோர்வு: வைட்டமின் டி குறைபாட்டின் முக்கிய அறிகுறிகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News