உடற்பயிற்சி செய்யாமல் உடல் எடையை குறைக்க வேண்டுமா? இதை ஃபாலோ பண்ணுங்க..!

Health Tips: உடற்பயிற்சி செய்யாமலும் சிலரால் உடல் எடையை குறைக்க முடியும். அதற்கு சில வழிமுறைகளை பின்பற்றினால் மட்டும் போதும். 

Written by - Yuvashree | Last Updated : Jun 14, 2023, 04:23 PM IST
  • உடற்பயிற்சி செய்யாமல் உடல் எடையை குறைக்கலாம்.
  • சிம்பிள் வழிகளை பின்பற்றினால் போதும்.
  • காய்கறி டயட்டை பின்பற்ற வேண்டும்.
உடற்பயிற்சி செய்யாமல் உடல் எடையை குறைக்க வேண்டுமா? இதை ஃபாலோ பண்ணுங்க..! title=

சிலரால், தங்களது உடல் பிரச்சனை காரணமாகவோ அல்லது நேரமின்மை காரணமாகவோ உடற்பயிற்சி செய்ய முடியாமல் போகலாம். சிலருக்கு உடற்பயிற்சி செய்வது பிடிக்காமல் கூட இருக்கலாம். அப்படி, உடலுக்கு உழைப்பு கொடுக்காமல் கூட நாம் சில வழிமுறைகளை பின்பற்றி உடல் எடையை குறைக்க முடியும். அது எப்படி தெரியுமா?

காலை உணவில் புரதச்சத்தை சேர்த்துக்கொள்ளுங்கள்:

நாம் காலையில் உண்ணும் முதல் உணவில், அதிகமான புரதச்சத்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என சில மருத்துவ நிபுணர்கள் அறிவுரை சொல்கின்றனர். இதற்கு காரணம், நாம் முந்தைய நாள் இரவு உணவுக்கு பிறகு கிட்டத்தட்ட 9-10 மணி நேரம் கழித்துதான் காலை உணவையே சாப்பிடுகிறோம்.  அப்படி சாப்பிடுகையில் புரதத்தை எடுத்துக்கொண்டால், அது உங்கள் டயட்டிற்கு உதவுவதுடன் எடையை குறைக்கவும் வழிவகை செய்கிறது.  புரத சத்து நிறைந்த காலை உணவு, உடலில் க்ளூகோஸ் அதிகரிக்கும், அது அடிக்கடி பசி ஏற்படாமல் தடுக்கும். 

புரதச்சத்து நிறைந்த உணவுகள்:
-சிக்கன் ப்ரெஸ்ட்
-க்ரீக் யோகர்ட்
-கடல் உணவுகள் (மீன், இறால் வகைகள்)

மேலும் படிக்க | இந்த உணவுகள் சாப்பிட்டால் மன அழுத்தமே இருக்காது..! 5 உணவுகளின் லிஸ்ட்

சாப்பிடும் புரதத்தை குறிப்பெடுங்கள்:

நாம் என்ன சாப்பிடுகிறோம், எவ்வளவு சாப்பிடுகிறோம் என்ற அளவினை கண்டிப்பாக கண்காணிக்க வேண்டும். அப்படி இதை ஃபாலோ செய்யவில்லை என்றால், உடல் எடையை குறைப்பது கஷ்டம். 250கிராம் கிண்ணத்தில் சாதம் சாப்பிடுகிறீர்கள் என்றால், அந்த அளவை குறிப்பெடுத்துக்கொள்ளுங்கள். இதற்கென்று, பல ஆப்கள் உங்கள் மொபைலிலும் கிடைக்கும். 

நீர் சத்து நிரம்பி இருக்கட்டும்..!

அதிக அளவில் தண்ணீர் குடிப்பது, நமது உடல் எடை குறைப்பில் கண்டிப்பாக பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது. நீர்சத்தை நிறைவாக வைத்து கொள்வதனால், கொழுப்பு கூட கரையுமாம். அது மட்டுமன்றி, சர்க்கரை நோய் மற்றும் புற்று நோய் ஆபத்தைகூட தண்ணீர் தடுக்குமாம். எனவே, அதிகமாக தண்ணீர் பருகுங்கள். 

சிற்றுண்டிகள் வேண்டாம்:

கண் எதிரிலேயே திண் பண்டங்கள் இருக்கும் போது அதை சாப்பிட வேண்டும் என பலருக்கு தோன்றாது. ஆனால், டயட் என்ற ஒன்று இருக்க ஆரம்பித்துவிட்டாலே இதை சாப்பிட வேண்டும் அதை சாப்பிட வேண்டும் என்ற அதீத ஆசைகள் தோன்றும். இதை கட்டுப்படுத்த கற்றுக்கொள்ளுங்கள். திண்பண்டங்களை அறவே ஒழித்து கட்டுங்கள். அதிலும் குறிப்பாக எண்ணெயில் பொறித்த உணவுகள் மற்றும் இனிப்பு நிறைந்த பொருட்கள் வேண்டவே வேண்டாம். இது, உங்கள் கொலஸ்ட்ரால் அளவை அதிகரித்து கொழுப்பை கரைய விடாமல் உடலிலேயே தங்க வைத்துக்கொள்ளும். இதனால் டயட் இருந்தும் ஒரு ப்ரயோஜனமும் இல்லை. 

கடுங்காப்பி உடலுக்கு நல்லது:

காலை-மாலை வேலைகளில் காபி பிரியர்கள் கப்பை தூக்கிக்கொண்டு ஓடுவது வழக்கம். உடலை இளைக்க வைக்க நினைப்போர், காபி குடிப்பதை தவிர்க்கவும். பால் கலந்த காபியில் anti oxidents அதிகமாக இருக்கும், இது, உடலில் கொழுப்பை அதிகரிக்கும். இதற்கு மாற்றாக நீங்கள் black cofee குடுக்கலாம். இதில், கொழுப்பின் அளவு குறைவாகவே உள்ளது. அதிலும், சர்க்கரை கலக்காமல் குடித்தால் இன்னும் நிறைய பயன் உண்டு.

காய்கறிகளை நண்பனாக்கி கொள்ளுங்கள்..

டயட் இருப்பதற்கு முன்னர் காய்கறிகளை அறவே தவிர்த்திருப்போம். ஆனோல் உடல் எடையை இழக்கும் முயற்சியில் இறங்கிய பிறகு, நாம் கண்டிப்பாக அதிகம் காய்கறிகளை சாப்பிட வேண்டியது அவசியம். ஒரு ஆய்வில், தங்களது உணவில் காய்கறிகளை அதிகம் எடுத்துக்கொண்டோர் விரைவில் உடல் எடையை குறைத்ததாக கூறப்பட்டுள்ளது. அதனால், காய்கறிகளை நண்பர்காளக்கி கொள்ளுங்கள்..

மேலும் படிக்க | நரை முடி பிரச்சனைக்கு குட்பை சொல்லனுமா? இந்த ஒரு விஷயத்தை செய்தால் போதும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News