பெரும்பாலான மக்களின் குறிக்கோள்களில் ஒன்று உடல் எடையைக் குறைப்பது தான், நம்மில் பலரும் உடல் எடையை குறைக்க போராடி வருகிறோம். உடல் எடை ஏறுவது கூட சீக்கிரம் ஆகிவிடும் ஆனால் அதிகரித்த எடையை சீக்கிரமே குறைப்பது மிகவும் சவாலான டாஸ்க். வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை மேற்கொள்வதன் மூலம் நமது உடல் எடையை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துவிடலாம். ஒவ்வொரு நாளும் குறைந்தது 100 முதல் 200 வரையிலான கலோரிகளை எரிக்க பரிந்துரைக்கப்படுகிறது. நீங்கள் வழக்கமாக சாப்பிடும் அளவில் கொஞ்சம் குறைத்து கொள்வது அல்லது ஒவ்வொரு நாளும் கூடுதலாக 10-20 நிமிடங்கள் நடப்பது போன்றவற்றை செய்யலாம். நீங்கள் சிறிய மாற்றங்களை செய்ய தொடங்கினாலே நாளடைவில் மிகப்பெரிய பலனை அடையலாம்.
மேலும் படிக்க | கொலஸ்ட்ராலால் அவதியா? வீட்டில் உள்ள இந்த பொருட்களை வைத்தே சரி செய்யலாம்!
உடல் எடையை குறைக்க உங்களை நீங்களே ஊக்கப்படுத்திக்கொள்ள வேண்டும், உந்துதல் இருந்தால் தான் எந்தவொரு காரியத்தையும் விரைவில் செய்து முடிக்க முடியும். உங்கள் பழக்கவழக்கங்களில் சிறு சிறு மாற்றங்களை இனிமேல் நீங்கள் செய்யத்தொடங்கினால் உங்கள் உடல் எடையில் சிறந்த மாற்றத்தினை பெறலாம். சக ஊழியர்களுடன் தொலைபேசி அழைப்பாக இருந்தாலும் சரி அல்லது நண்பர்களுடன் பேசுவாங்க இருந்தாலும் சரி அமர்ந்துகொண்டு பேசாமல் கொஞ்சம் நடந்துகொண்டு பேச பழகுங்கள். ஒரு நாளில் நீங்கள் கூடுதலாக 20-30 நிமிடங்கள் வரை நடப்பது 100 கலோரிகள் வரை எரிக்க உதவும். நீங்கள் தொலைக்காட்சியில் ஏதேனும் நிகழ்ச்சி பார்த்து கொண்டு இருக்கிறீர்கள் என்றால் விளம்பர இடைவேளை வரும்போது க்ரஞ்ச்ஸ், லுங்க்ஸ் அல்லது ஸ்குவாட்ஸ் போன்ற எளிய மற்றும் சிறந்த பலன் தரக்கூடிய உடற்பயிற்சிகளை செய்யலாம். இவ்வாறு நீங்கள் நிகழ்ச்சியின் இடைவேளைகளில் பயிற்சிகளை செய்தாலே 100 கலோரிகள் வரை எரிக்கலாம்.
சீஸ், வெண்ணெய், மயோனைஸ் மற்றும் கெட்ச்அப் போன்றவற்றை அதிக சுவைக்காக பலரும் உணவில் சேர்த்து கொள்கின்றனர், இவை அதிக அளவு கலோரிகளைக் கொண்டிருக்கின்றன. உதாரணமாக, 30 கிராம் சீஸ் 100 கலோரிகளையும், 30 கிராம் மயோனைஸ் 200 கலோரிகளையும் கொண்டுள்ளது. லேட்ஸ், கேப்புச்சினோஸ் மற்றும் ஹாட் சாக்லேட் போன்ற பானங்கள் நீங்கள் நினைப்பதை விட அதிக கலோரிக் கொண்டதாக இருக்கும். அவற்றைக் குறைப்பதன் மூலம் உங்கள் கலோரி உட்கொள்ளலை சுமார் 100-200 கலோரிகள் குறைக்கலாம். காபி குடிக்காமல் இருக்க முடியாவிட்டால் பிளாக் காபி எடுத்துக்கொள்ளலாம்.
மேலும் படிக்க | கொலஸ்ட்ராலால் அவதியா? வீட்டில் உள்ள இந்த பொருட்களை வைத்தே சரி செய்யலாம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ