உடல் எடை அதிகரிப்பால் அவதியா? இத மட்டும் குடிச்சி பாருங்க

Weight Loss Tips: எடை கூடியவர்கள், தங்கள் எடையைக் குறைக்க விரும்பினால், அதற்கு  ஒரு எளிய, இயற்கையான வழி உள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 28, 2022, 06:19 PM IST
  • வைட்டமின்கள், நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் பூசணி சாற்றில் போதுமான அளவில் உள்ளன.
  • மேலும், பூசணிக்காயில் போதுமான அளவு வைட்டமின் டி உள்ளது.
  • இது முழு உடல் ஆரோக்கியத்துக்கும் நன்மை பயக்கும்.
உடல் எடை அதிகரிப்பால் அவதியா? இத மட்டும் குடிச்சி பாருங்க title=

உடல் எடையை குறைக்க உதவும் பூசணி சாறு: இன்றைய காலகட்டத்தில் அனைவரும் ஃபிட்டாக இருக்க விரும்புகிறார்கள். ஏனெனில் உடல் பருமன் பல வகையான நோய்களை ஏற்படுத்துகிறது. இந்த பிரச்சனையிலிருந்து தப்பிக்க, அனைவரும் தங்கள் உணவில் கவனம் செலுத்த வேண்டும். எடை கூடியவர்கள், தங்கள் எடையைக் குறைக்க விரும்பினால், அதற்கு  ஒரு எளிய, இயற்கையான வழி உள்ளது. பூசணி சாறு இதில் உங்களுக்கு உதவியாக இருக்கும்.

எடை குறைக்க விரும்புபவர்கள் பூசணி சாற்றை தங்கள் உணவில் சேர்க்கலாம். பூசணி சாறு உட்கொள்வதால் உடலுக்கு பல வித நன்மைகள் கிடைக்கின்றன. பூசணி சாற்றை நாம் உட்கொள்வதால்  ஏற்படும் ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம். 

வைட்டமின்கள், நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் பூசணி சாற்றில் போதுமான அளவில் உள்ளன. மேலும், பூசணிக்காயில் போதுமான அளவு வைட்டமின் டி உள்ளது. இது முழு உடல் ஆரோக்கியத்துக்கும் நன்மை பயக்கும். பூசணி சாறு மூலம் உடல் எடையை குறைப்பதற்கான வழிமுறையை இங்கே காணலாம்.

பூசணிக்காய் சாறு இப்படி செய்து கொள்ளவும்

பூசணி சாறு தயாரிக்க, பழுத்த பூசணி துண்டுகளை எடுத்து சிறிய துண்டுகளாக வெட்டவும். இப்போது இந்த துண்டுகளிலிருந்து தோல்களை அகற்றவும். இதற்குப் பிறகு, அவன் அல்லது வேறு ஏதாவது வழியில் பேக் செய்யவும். இது நன்றாக வெந்த பிறகு, இதை கிரைண்ட் செய்து பின்னர் இதில் சுவைக்கு ஆப்பிள் துண்டுகளை சேர்த்துக்கொள்ளவும். இப்போது இதை நன்றாகக் கலந்து அதன் சாறு செய்து வடிகட்டிக் கொள்ளவும். இந்த சாற்றை தினமும் உட்கொள்ளுங்கள்.

மேலும் படிக்க | இளநரை பிரச்சனை பாடாய் படுத்துதா? இந்த விஷயங்களில் கவனமா இருங்க

உடல் எடையை குறைக்க பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

- பூசணி சாறு குடிப்பது உங்கள் செரிமான அமைப்புக்கு நன்மை பயக்கும். 

- இதில் உள்ள நார்ச்சத்து, செரிமான அமைப்பை வலுப்படுத்தவும், மலச்சிக்கல் பிரச்சனையை நீக்கவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. 

- மறுபுறம், உங்கள் செரிமானம் நன்றாக இருந்தால், எடையைக் குறைப்பதில் நீங்கள் அதிக நன்மைகளைப் பெறுவீர்கள்.

- பூசணி சாறு ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகளைக் கொண்டுள்ளது.

- அதை உட்கொள்வது உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவுகிறது.

- இது தவிர, வீக்கத்தைக் குறைப்பதிலும் இது நன்மை பயக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | Belly Fat: தொப்பையை வெண்ணெய் போல் கரைக்கும் ‘மேஜிக் டிரிங்க்’; தயாரிப்பது எப்படி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News