கோடைக்காலம் உடல் எடையை குறைக்க ஏற்ற காலமாக கருதப்படுகின்றது. இந்த சீசனில் பொதுவாக நாம் சுறுசுறுப்பாக இருக்கிறோம். குளிரோ பனியோ இல்லாததால், கோடையில் காலை வேளைகளில் நீண்ட நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சி செய்யலாம்.
கோடையில், உடல் எடையை குறைக்க உதவும் உணவுகளை பற்றி இந்தபதிவில் தெரிந்துகொள்ளலாம். கோடைக்காலத்தில் திடமான உணவுகளை உண்பதை விட அதிகமாக பானங்களை அருந்தவே மனம் விரும்பும். கோடையில் அதிகமான அளவில் தண்ணீர், பழ ரசங்கள், நீர் மோர் ஆகியவற்றை குடிக்கலாம்.
இது தவிர, நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளும் இந்த பருவத்தில் அதிகம் விற்கப்படுகின்றன. இவற்றை போதுமான அளவு சாப்பிடுவதன் மூலம் உங்கள் எடையை எளிதாகக் குறைக்கலாம். இந்த பழங்களில் இருந்து உடலுக்கும் அனைத்து சத்துக்களும் கிடைக்கும் என்பது சிறப்பு. இந்த பழங்களை உட்கொள்வதன் மூலம் உங்கள் எடையை எளிதாக குறைக்கலாம்.
கோடையில் இந்த பழங்களை சாப்பிடுவதன் மூலம் உடல் எடையை குறைக்கலாம்
தர்பூசணி:
கோடையில் அனைவருக்கும் பிடித்த பழம் தர்பூசணி. இது நீர்ச்சத்து நிறைந்த பழமாகும். தர்பூசணியில் 92 சதவீதம் தண்ணீர் உள்ளது. தர்பூசணி சாப்பிடுவதால் வயிறு எளிதில் நிறைவதோடு, உடலில் மிகக் குறைவான கலோரிகளே சேர்கின்றன. தர்பூசணியில் வைட்டமின் ஏ, பி6, சி, அமினோ அமிலங்கள் மற்றும் நார்ச்சத்து போன்ற சத்துக்களும் உள்ளன.
முலாம்பழம்:
நீங்கள் கோடையில் இனிப்பான முலாம்பழம் சாப்பிட்டால், அதன் சுவை இந்த உலகையே மறக்கடித்து விடும். முலாம்பழத்தில் வைட்டமின் சி அதிக அளவில் காணப்படுகிறது. இது எடை குறைக்க உதவுகிறது. காலை உணவாக முலாம்பழம் சாப்பிடலாம். முலாம்பழம் சாப்பிடுவதால் உடலுக்கு ஏராளமான நார்ச்சத்து கிடைக்கிறது. இதனால் வயிற்றை சுத்தமாக இருப்பதோடு, சருமம் பளபளப்பாகவும் இருக்கும்.
மாம்பழம்:
கோடை என்றால் மாம்பழ சீசன்தான் நினைவுக்கு வரும். இந்த சீசனில் தான் பழங்களின் அரசன் மாம்பழமும் வரும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மாம்பழம் மிகவும் பிடிக்கும். மாம்பழம் சாப்பிடுவது உடல் எடையை குறைக்க உதவுகிறது. மாம்பழம் உண்பதற்கு சுவையானதாக இருப்பதோடு, இதில் பல சத்துக்களும் நிறைந்துள்ளன. மாம்பழத்தில் வைட்டமின் ஏ, சி மற்றும் டி உள்ளன. மாம்பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது.
அன்னாசிப்பழம்:
அன்னாசிப்பழம் கோடையில் அதிகமாக கிடைக்கும். அன்னாசிப்பழத்தில் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. அன்னாசிப்பழம் வைட்டமின் சி-யின் நல்ல மூலமாகும். இதில் ஏராளமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. அன்னாசிப்பழம் சாப்பிடுவது உடல் எடையை குறைக்க உதவுகிறது. இதனை உண்பதால் நீண்ட நேரம் வயிறு நிரம்பி இருப்பதோடு பசியும் இருக்காது.
பிளம்ஸ்:
மற்ற இனிப்பு பழங்களை ஒப்பிடும்போது எடை இழப்புக்கு பிளம்ஸ் சாப்பிடலாம். பிளம்ஸில் கலோரிகள் மிகவும் குறைவு. இதை சாப்பிடுவது எடை இழப்புக்கு உதவுகிறது. பிளம்ஸில் நார்ச்சத்து நிறைந்துள்ளது, இதில் சர்பிடால் மற்றும் இசடின் ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன.
பீச்:
பீச்சில் அதிகமான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. இதன் காரணமாக உங்கள் உடலுக்கு ஏராளமான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். பீச் சாப்பிடுவது உடல் எடையை குறைக்க உதவுகிறது, செரிமான அமைப்பை பலப்படுத்துகிறது, சருமத்தை பிரகாசமாக்குகிறது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
மேலும் படிக்க | இந்த 4 ட்ரை புரூட்ஸ் உடலில் அதிகரித்த கொழுப்பை ஈசியா குறைக்கும்
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR