உடல் எடையை சட்டென குறைக்க காலையில் சாப்பிட வேண்டிய உணவுகள்!

ஓட்ஸில் ஊட்டச்சத்துக்கள் அதிகமிருந்தாலும் புரத சத்து அதில் இல்லை, அதனால் காலை உணவில் ஓட்ஸ் உடன் சேர்த்து புரத சத்து நிறைந்த உணவையும் சேர்த்து சாப்பிடுவது நல்லது.  

Written by - RK Spark | Last Updated : Sep 19, 2022, 06:24 AM IST
  • பல பிரபலங்களின் உடல் எடை குறைப்பின் சீக்ரெட்டில் கண்டிப்பாக ஓட்மீல் இடம்பெற்றிருக்கும்.
  • முழு தானியமான ஓட்ஸ் குறைந்த அளவு கலோரியை கொண்டுள்ளது.
  • சுவையூட்டப்பட்ட பொருட்களை ஓட்மீலில் சேர்த்துக்கொள்வதை தவிர்ப்பது நல்லது.
உடல் எடையை சட்டென குறைக்க காலையில் சாப்பிட வேண்டிய உணவுகள்!  title=

உடல் எடை குறைப்பில் ஓட்ஸ் முக்கிய பங்கு வகிக்கிறது, பலரும் உடல் எடையை குறைக்க தினமும் உணவில் ஓட்ஸ் சேர்க்க தொடங்கிவிட்டனர்.  தினசரி ஒருவரது காலை உணவில் ஓட்ஸ் சேர்ப்பது உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதோடு உங்கள் உடல் எடை இழப்புக்கும் உதவுகிறது.  பல பிரபலங்களின் உடல் எடை குறைப்பின் சீக்ரெட்டில் கண்டிப்பாக ஓட்மீல் இடம்பெற்றிருக்கும்.  உலர்ந்த ஓட்ஸ் ஆனது ஊட்டச்சத்து மிகுந்த சிறந்த உணவாகும், முழு தானியமான ஓட்ஸ் குறைந்த அளவு கலோரியை கொண்டுள்ளதால், இதனை எவ்வித தயக்கமுமின்றி உட்கொள்ளலாம்.  ஓட்மீல் தயாரிப்பது சிரமமில்லாத ஒன்று, நீங்கள் மிக விரைவிலேயே விரும்பும் விதத்தில் ஓட்மீல் தயார் செய்துகொள்ள முடியும்.  செயற்கையான இனிப்பு சுவையூட்டப்பட்ட பொருட்கள் போன்றவற்றை ஓட்மீலில் சேர்த்துக்கொள்வதை தவிர்ப்பது நல்லது.

ஓட்ஸில் ஊட்டச்சத்து மற்றும் கரையக்கூடிய நார்ச்சத்து நிறைந்துள்ளது, இதனை நீங்கள் சாப்பிடும்பொழுது உங்களுக்கு நீண்ட நேரத்திற்கு வயிறு நிறைவாக இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது, இதனால் நீங்கள் அதிகளவில் உணவு எடுத்துக்கொள்வது தவிர்க்கப்பட்டு தேவையற்ற கலோரிகள் உடலில் சேர்வது தடுக்கப்படுகிறது.  மற்றவகை தானியங்களை காட்டிலும் உடல் எடை குறைப்பில் ஓட்ஸ் முக்கிய பங்கு வகிப்பதாக சில ஆய்வுகள் கூறுகிறது.  உங்கள் நாளை நீங்கள் ஒரு கப் ஓட்ஸ் உடன் தொடங்குவது உங்களை ஆரோக்கிய பாதையில் கொண்டு செல்லும் என்று கூறப்படுகிறது.  ஓட்ஸில் ஊட்டச்சத்துக்கள் அதிகமிருந்தாலும் புரத சத்து அதில் இல்லை, அதனால் காலை உணவில் ஓட்ஸ் உடன் சேர்த்து புரத சத்து நிறைந்த உணவையும் சேர்த்து சாப்பிடுவது நல்லது.

மேலும் படிக்க | நீரிழிவு நோயை ஓட விரட்டும் பிரியாணி இலை; பயன்படுத்தும் முறை!

ஓட்ஸில் வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் உள்ளது.  உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் ஓட்ஸுடன் புரதம் சேர்த்து சாப்பிடுவது நல்லது.  மேலும் ஓட்ஸ் ரத்த சர்க்கரை அளவைக் குறைக்கவும், கொழுப்பைக் குறைக்கவும் மற்றும் இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் பயன்படுகிறது.  ஓட்ஸுடன் முட்டை, தயிர் அல்லது வேர்க்கடலை சேர்த்துக்கொள்ளலாம்.  ஓட்ஸ் உணவில் பால் சேர்க்காமல் சாப்பிடுவது உடல் எடை இழப்புக்கு நல்லது, மேலும் இதில் கொழுப்பு நிறைந்த அல்லது இனிப்பு நிறைந்த டாப்பிங்க்ஸை சேர்த்து கொள்வதை தவிர்ப்பது உடல் எடை குறைப்பவருக்கு பயன் தரும்.

மேலும் படிக்க | Belly Fat: தொப்பையை வெண்ணை போல் கரைக்கும் '3' மேஜிக் பானங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News