அட நம்புங்க.. பிளாக் காபி குடிச்சா, பிளாட் டம்மி கிடைக்கும்: இப்படி குடிச்சா போதும்!!

Black Coffee For Weight Loss: பல எளிய இயற்கையான உணவுகள் மற்றும் பானங்கள் மூலம் உடல் எடையை எளிதாக குறைக்கலாம். அப்படி ஒரு சுலபமான வழி பற்றி இந்த பதிவில் காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 5, 2023, 03:53 PM IST
  • பிளாக் காபி எப்படி எடையை குறைக்கிறது?
  • பிளாக் காபியில் உள்ள ஊட்டச்சத்துக்கள் என்ன?
  • தேன் எப்படி எடையை குறைக்கிறது?
அட நம்புங்க.. பிளாக் காபி குடிச்சா, பிளாட் டம்மி கிடைக்கும்: இப்படி குடிச்சா போதும்!! title=

எடை இழப்பு குறிப்புகள்: எடை அதிகரிப்பு என்பது இன்று மிகக் கடுமையான பிரச்சனைகளில் ஒன்றாக மாறிவிட்டது. எடை அதிகரிப்பதற்கான காரணங்கள் எதுவாக இருந்தாலும், அதைக் குறைப்பது ஒரு சவாலாகவே உள்ளது. உடல் எடையை குறைக்க பல வழிகள் இருந்தாலும், வழக்கமான உடற்பயிற்சிகளை செய்வதும் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வதும் மிகவும் பயனுள்ள வழிகளாக உள்ளன.

உடற்பயிற்சியை விட ஆரோக்கியமான உணவு உடல் எடையை குறைப்பதில் பெரிய பங்கு வகிக்கிறது என்று நிபுணர்கள் நம்புகின்றனர். நீங்கள் விரைவாக உடல் எடையை குறைக்க விரும்பினால், புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த மற்றும் குறைந்த கலோரிகள் கொண்ட உணவுகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும். பல எளிய இயற்கையான உணவுகள் மற்றும் பானங்கள் மூலம் உடல் எடையை எளிதாக குறைக்கலாம். அப்படி ஒரு சுலபமான வழி பற்றி இந்த பதிவில் காணலாம். 

எடை இழப்புக்கு தேனுடன் பிளாக் காபி: 

காபி குடிக்க யாருக்குத்தான் பிடிக்காது? காபி பலருக்கு பிடித்தமான ஒரு காலை வேளை பானமாக இருக்கிறது. காபி குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதாக கருதப்படுவதில்லை, ஏனெனில் அதில் அதிக அளவு காஃபின் உள்ளது. இது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. மேலும் பால் மற்றும் சர்க்கரையை இதில் கலந்து குடிப்பது நீரிழிவு அபாயத்தை அதிகரிக்கிறது. எனினும் பால் சர்க்கரை சேர்க்காமல் பிளாக் காபி குடித்தால், அது உடலுக்கு ஆற்றலைத் தரும் என்பதால், உடல் ஆரோக்கியத்திற்கு இது நன்மை பயக்கும். உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு பிளாக் காபி பலன் தரும். அதில் தேன் சேர்த்தாலே போதும், இதன் பலன் பன்மடங்காக அதிகரிக்கும். இதன் மூலம் நீங்கள் விரைவில் உடல் எடையை குறைக்க முடியும். 

பிளாக் காபி எப்படி எடையை குறைக்கிறது?

காபியில் உள்ள காஃபினை மிதமாக உட்கொண்டால் நன்மை பயக்கும். ஏனெனில் இது நரம்பியக்கடத்திகளைத் தூண்டுகிறது. இதன் காரணமாகத்தான் காஃபின் பல கொழுப்பை எரிக்கும் துணைப் பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக, உடலில் இருக்கும் கொழுப்பு திசுவில் அசைவுகள் ஏற்படுகின்றன. 

மேலும் படிக்க | உருளைக்கிழங்கு சாப்பிட்டால் உடல் எடை குறையுமா..?

பிளாக் காபியில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

பிளாக் காபியில் சத்துக்களுக்கு பஞ்சம் இல்லை. இதன் காரணமாக இது உடலுக்கு நன்மை பயக்கும் பானமாக கருதப்படுகிறது. வைட்டமின்-பி1, வைட்டமின்-பி2, வைட்டமின்-பி3, வைட்டமின்-பி5, பொட்டாசியம், பாஸ்பரஸ், மக்னீசியம், ஃபோலேட் மற்றும் மாங்கனீஸ் போன்ற சத்துக்கள் இதில் உள்ளன.

தேன் எப்படி எடையை குறைக்கிறது?

தேனில் ஸ்டோர்ட் என்ற சத்து உள்ளது. இது கொழுப்பை திரட்டுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆகையால் பெரும்பாலான சுகாதார நிபுணர்கள் கொழுப்பை குறைக்க தேனை உட்கொள்ள பரிந்துரைக்கின்றனர். இது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. மேலும் ட்ரைகிளிசரைடுகளையும் குறைக்கிறது.
 
பிளாக் காபி மற்றும் தேன் கலவை

பிளாக் காபியுடன் தேனைக் கலந்து சாப்பிட்டால், அதன் கலவையானது எடை இழப்பு செயல்முறைக்கு பெரிதும் உதவும், அதே போல் உடலின் ஆற்றலில் எந்தக் குறைவும் இருக்காது. தேனில் உடலுக்கு தீங்கு விளைவிக்காத இயற்கை சர்க்கரை உள்ளது. இந்த பானத்தின் அதிகபட்ச பலனை நீங்கள் பெற விரும்பினால், காலையில் வெறும் வயிற்றில் இதை குடிக்கவும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | தொங்கும் தொப்பை தொல்லை செய்கிறதா? 'இந்த' தண்ணீர் டெய்லி குடிங்க

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News