Weight Loss Tips: இந்த 3 மூன்று தவறுகளை மட்டும் பண்ணாதிங்க!

உடல் எடையை குறைக்க ஆரோக்கியம் முக்கியம். அதனால் சரியான தூக்கம், உணவு, மன ஆரோக்கியம் போன்றவை அவசியம்.  தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது உங்கள் தசைகளை வலுவாக்கும்.  

Written by - RK Spark | Last Updated : Dec 8, 2022, 06:13 AM IST
  • உடல் எடையை குறைப்பது அவ்வளவு சுலபம் அல்ல.
  • கடுமையான உணவு கட்டுப்பாடு அவசியம்.
  • சில உடற்பயிற்சிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.
Weight Loss Tips: இந்த 3 மூன்று தவறுகளை மட்டும் பண்ணாதிங்க! title=

இன்றைய காலகட்டத்து மக்களின் பெரும்பாலான கவலை உடல்பருமன் தான், உட்கார்ந்த வேலை, அதிக உடலுழைப்பின்மை காரணமாக பலரும் உடல் எடை அதிகரிப்பை சந்தித்து வருகின்றனர்.  உடல் எடை சுலபமாக அதிகரித்துவிடும். ஆனால் அதை குறைப்பது அவ்வளவு சுலபமில்லை, அது மிகவும் கடினமான ஒரு டாஸ்க்.  எவ்வளவு கடினமான உடற்பயிற்சிகளையும் செய்தாலும், சிலருக்கு உடல் எடையில் எவ்வித மாற்றமும் ஏற்படாமல் இருக்கிறது அதற்கு காரணம் அவர்கள் செய்யும் சில தவறுகள் தான்.

மேலும் படிக்க | Hair Care : முடி வளர்ச்சிக்கு இந்த 3 பொருட்கள் இருந்தா போதும்

புத்தாண்டின் தொடக்கத்தில் பலரும் எடுக்கும் ரிசல்யூஷன்களில் ஒன்றுதான் உடல் எடையை குறைத்து ஃபிட்டாக வைத்திருக்க வேண்டும் என்பது, 2023ம் ஆண்டு தொடங்க இன்னும் சில காலங்களே உள்ளதால் இப்போதிலிருந்தே சரியான முறையில் உணவை உட்கொண்டு, முறையான உடற்யிற்சியை தொடங்க வேண்டும், இதை அப்படியே 2023லும் தொடர வேண்டும், அதைவிடுத்து 2023 தொடங்குவதற்காக காத்திருக்காதீர்கள்.  உடல் எடையை குறைக்க ஆரோக்கியம் முக்கியம் அதனால் சரியான தூக்கம், உணவு, மன ஆரோக்கியம் போன்றவை அவசியம்.  தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது உங்கள் தசைகளை வலுவாக்கும் 

உடல் எடை குறைப்பது ஒரு எண் விளையாட்டாக மாற்றிக்கொள்ளுங்கள், உங்களது டயட்டில் கட்டாயம் வீட்டில் சமைத்த உணவுகளையே சேர்த்துக்கொள்ளுங்கள், பேக்கிங் செய்யப்பட்ட உணவு, ஆர்டர் செய்வதை தவிர்த்துவிடுங்கள் மற்றும் உடல் எடை குறைப்பிற்கு மாத்திரைகள் எடுத்துக்கொள்வதையெல்லாம் தவிர்க்க வேண்டும்.  உங்கள் உடல் எடை இழப்போடு சேர்த்து உங்கள் தூக்கம் மற்றும் மகிழ்ச்சியும் இழக்கும் நிலை ஏற்பட்டால் நீங்கள் உங்கள் உடலை ஆரோக்கியமான நிலையில் கொண்டு செல்ல வேண்டும்.

மேலும் படிக்க | நோயற்ற வாழ்விற்கு தினமும் ஐந்து மிளகு போதும்... சாப்பிடுவது எப்படி! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News