கோடைக்காலத்தை ஆரோக்கியமாக கழிக்க உதவும் தர்பூசணிப் பழம் அனைவருக்கும் பல்வேறு நன்மைகளைக் கொடுக்கிறது.
தர்பூசணி பருவக்காலப் பழமாக இருப்பதால், இந்த பருவம் முடிந்துவிட்டால் அதன் நன்மைகளும் கிடைக்காது என்று பலர் கவலைப்படுவார்கள்.
அற்புதமான ஆரோக்கிய நன்மைகளைத் தரும் தர்பூசணியின் நன்மையை ஆண்டுதோரும் எப்போது வேண்டுமானாலும் அனுபவிக்க உதவுகிறது அதன் விதைகள்.
வெயில் காலத்தில் தர்பூசணி விதைகளை சாப்பிடுவதால் பல அற்புதமான நன்மைகள் கிடைக்கும். இந்தியாவின் இந்த கடுமையான கோடை காலத்தில் தர்பூசணியை உட்கொள்வது உடலின் நீர்ச்சத்தை தக்க வைத்திருக்க ஒரு சிறந்த வழி.
ஆனால் தர்பூசணி மட்டுமல்ல, தர்பூசணி விதைகளும் உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
மேலும் படிக்க | வாய் பிளக்க வைக்கும் வாழைப்பழ மாஸ்க்: முகம் பளிச் என்று பளபளக்கும்
உடல் பருமனைக் கட்டுப்படுத்தும் தர்பூசணி விதை
அதிக எடை அல்லது உடல் பருமன் பிரச்சனை கொண்டவர்களுக்கு குறைந்த கலோரி தர்பூசணி விதைகள் மிகவும் நன்மை பயக்கும்.
எடை இழப்புக்கு நன்மை பயக்கும் சூப்பர் பழமாக இருக்கும் தர்பூசணி விதைகள். தர்பூசணி விதைகளைப் பயன்படுத்தி சாலடுகள் செய்யலாம்.
காய்கறிகளுடன் சேர்ந்து சமைத்தால் வித்தியாசமே தெரியாது. சிற்றுண்டிகளில் தர்பூசணி விதையைச் சேர்த்து, தினசரி உணவின் ஒரு பகுதியாக மாற்றலாம்.
தர்பூசணி விதைகளை சாப்பிடுவதால் பல அற்புதமான நன்மைகள் ஏற்படும். கொரோனா காலத்தில் தான் மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியின் முக்கியத்துவம் உண்மையாக தெரியவந்தது என்று சொல்லலாம்.
எனவே, நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதில் பயனுள்ளதாக இருக்கும் தர்பூசணியின் விதைகளும் ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது. ஆரோக்கியத்திற்கு எல்லா வகையிலும் நன்மை பயக்கும் அதன் அற்புத ஆற்றலையும் தெரிந்துக் கொண்டால் தர்பூசணியின் ஆரோக்கியப் பயன்களை ஆண்டு முழுவதும் பெறலாம்.
இரத்த அழுத்த பிரச்சனையை குறைக்கும்
உணவில் தர்பூசணி விதைகளை சேர்த்துக்கொள்வதன் மூலம், அதில் உள்ள புரதம் மற்றும் அமினோ அமிலங்கள் இரத்த அழுத்த பிரச்சனையை குறைக்கலாம்.
தர்பூசணி விதைகள் உடலின் திசுக்களை சரிசெய்வதன் மூலம் தசைகளை ஆரோக்கியமாக்குகிறது மற்றும் தசை வலியிலிருந்து விடுபடுவதில் பயனுள்ளதாக இருக்கும்.
மேலும் படிக்க | தொப்பையை கரைக்கும் 3 மேஜிக் பானங்கள்
இதய பிரச்சனைகளுக்கு தீர்வு
தர்பூசணி விதைகளில் அதிக அளவு மோனோசாச்சுரேட்டட் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் உள்ளன, அவை மாரடைப்பு அபாயத்தைக் குறைப்பதில் நன்மை பயக்கும். தர்பூசணியின் விதைகள் ஹீமோகுளோபினையும் அதிகரிக்கும்.
வெயில் காலத்தில் வெப்ப அலை காரணமாக, மிக விரைவில் சோர்வாக உணர ஆரம்பிக்கிறோம். அத்தகைய சூழ்நிலையில், தர்பூசணி விதைகளை உட்கொள்வதன் மூலம், உடலுக்குத் தேவையானல் உடனடி ஆற்றலைப் பெற முடியும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | துளசியில் இருக்கும் மருத்துவ குணங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR