மீண்டும் பரவும் ஆபத்தான வைரஸ்! இந்த அறிகுறிகள் இருந்தால் அலட்சியப்படுத்த வேண்டாம்!

West Nile Virus: கடந்த ஆண்டு முதல் ஐரோப்பிய நாடுகளில் மேற்கு நைல் வைரஸால் 713 பேர் பாதிக்கப்பட்டு, அதில் 67 பேர் இருந்துள்ளனர்.

1 /6

மேற்கு நைல் வைரஸ் எனப்படும் புதிய ஆபத்தான வைரஸ் தற்போது ஐரோப்பாவில் அதிகரித்து வருகின்றன. இதனால் ஸ்பெயின் மற்றும் இத்தாலிக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

2 /6

சமீபத்தில் ஸ்பெயினின் செவில்லி நகரில் ஒரு நபருக்கும், இத்தாலியின் மொடெனா நகரில் உள்ள ஒருவருக்கும் இந்த வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

3 /6

கொசுக்களால் பரவும் இந்த வைரஸ் உடலில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டால் காய்ச்சல், உடல் வலி வாந்தி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

4 /6

ஒரு சிலருக்கு இந்த வைரஸ் பாதிப்பால் தசை பலவீனம் மற்றும் பக்கவாதம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

5 /6

இந்த புதிய வகை தொற்று நோய் மனிதர்களுக்கு மட்டும் பரவாமல், கொசுக்களிலும் பரவுவது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வலியுறுத்தப்படுகிறது.

6 /6

ஐரோப்பாவில் அதிகரித்து வரும் இந்த கொசுக்கள் ஏற்கனவே நோய் பாதித்த பகுதிகளுக்கு சென்று டெங்கு போன்ற நோய்களை பரப்பி வருகிறது. வெளிநாட்டு பயணிகள் வருகையால் மற்ற நாடுகளுக்கும் பரவும் அபாயம் உள்ளது.