நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும் பழங்கள்: சரியான உணவைத் தேர்ந்தெடுப்பது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் முக்கியம். இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவும் சில இனிப்பான மற்றும் புளிப்பு சுவை பழங்கள் உள்ளன. சிட்ரஸ் பழங்கள் நீரிழிவு நோயாளிகளுக்கு குறிப்பாக நன்மை பயக்கும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. புளிப்பு சுவை கொண்ட பழங்கள் பொதுவாக அனைவருக்குமே ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். ஏனெனில், அவற்றில் ஏராளமான வைட்டமின் சி உள்ளது.
பல ஆய்வுகள் நீரிழிவு நோயாளிகளுக்கு வைட்டமின் சி நிறைந்த பழங்கள் மிகவும் பயனுள்ளதாக இருப்பதை நிரூபிக்கிறது. ஏனெனில் இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. உங்களுக்கும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் என்ற கவலை இருந்தால், இன்று நாம் உங்களுக்கு பரிந்திரைக்கும் ஐந்து பழங்களை உட்கொள்வதன் மூலம் உங்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தி, சர்க்கரை நோயிலிருந்து (Health Tips) நிவாரணம் பெறலாம்.
1. நாவல் பழம் என்னும் ஜாமூன்
நாவல் பழம என அழைக்கப்படும் ஜாமூனில் குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் (ஜிஐ) உள்ளது. இது இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்க அனுமதிக்காது. இதில் நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, அவை நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. தினமும் ஒரு கைப்பிடி நாவல் பழம் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டால் நீரிழிவை சிறப்பாக கட்டுப்படுத்தலாம். இதை ஸ்மூத்தி வடிவிலும் உட்கொள்ளலாம்.
2. ஆப்பிள்கள்
சர்க்கரை நோயாளிகளுக்கு ஆப்பிள் உட்கொள்வது மிகவும் நன்மை பயக்கும், ஏனெனில் அதில் இயற்கை சர்க்கரை இருப்பதால் அவர்களுக்கு தீங்கு விளைவிக்காது. ஆப்பிளில் நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி உள்ளது. இதில் உள்ள பெக்டின் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது.தினமும் ஒரு ஆப்பிளை உட்கொள்வது உங்களுக்கு நன்மை பயக்கும். அதே நேரத்தில், நீங்கள் ஆப்பிளை அதன் தோலுடன் சாப்பிட வேண்டும், இதனால் உமகளுக்கு அதிகபட்ச நார்ச்சத்து கிடைக்கும்.
மேலும் படிக்க | முகக் கொழுப்பை குறைக்க... என்ன சாப்பிடலாம்...? என்ன சாப்பிடக்கூடாது?
3. கிவி
கிவி புளிப்பு சுவை கொண்ட ஒரு பழம். இது சாப்பிட சுவையாகவும் இருப்பதால், பலரால் விரும்பப்படும் பழமாகவும் உள்ளது. கிவியில் வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் நார்ச்சத்து உள்ளது. இதன் கிளைசெமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ளது, இது இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும். நீங்கள் கிவியை சாலட், ஸ்மூத்தியாகவும் சாப்பிடலாம்.
4. திராட்சை
திராட்சை ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும், அதன் நுகர்வு உங்கள் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். திராட்சையில் ரெஸ்வெராட்ரோல் என்ற ஆன்டி ஆக்ஸிடன்ட் உள்ளது. இது இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது. இதில் வைட்டமின் சி மற்றும் கே உள்ளது. நீங்கள் திராட்சையை சாதாரணமாக அல்லது பழ கஸ்டர்ட் வடிவில் உட்கொள்ளலாம். தினமும் ஒரு சிறிய கிண்ணம் திராட்சையை உட்கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
5. பேரிக்காய்
பேரிக்காய் புளிப்புப் பழங்கள் வகையிலும் வருவதால் சுவையில் சிறந்தது. பேரிக்காயில் ஏராளமான நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி உள்ளது. அதன் கிளைசெமிக் சுமையும் குறைவாக உள்ளது, இது இரத்த சர்க்கரையை சீராக வைக்கிறது. அதிகபட்ச நார்ச்சத்து பெற பேரிக்காய் தோலுடன் சாப்பிடுங்கள்.
மேலும் படிக்க | ஓமத்தை ‘இப்படி’ சாப்பிட்டா... யூரிக் அமில பிரச்சனைக்கு முடிவு கட்டலாம்..!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ