ஆரோக்கியமான உடலுக்கு அனைத்து வகையான ஊட்டச்சத்தும் தேவை என்பதில் மாற்று கருத்து ஏதும் இல்லை. அதில் விட்டமின்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதில் உடலில் வைட்டமின் B குறைபாட்டால் ஏற்படும் பாதிப்புகளை அறிந்து கொள்ளலாம். பல வகையான வைட்டமின் B பற்றியும் அறிந்து கொள்வோம்.
எத்தனை வகையான வைட்டமின் B உள்ளது?
முக்கியமாக 8 வகையான வைட்டமின் பி உள்ளது. அனைத்து வகையான வைட்டமின் பிகளின் குழுவும் பி-காம்ப்ளக்ஸ் (B-Complex) என்று அழைக்கப்படுகிறது.
வைட்டமின் பி1 (தியாமின்)
வைட்டமின் பி2 (ரைபோஃப்ளேவின்)
வைட்டமின் பி3 (நியாசின்)
வைட்டமின் பி5 (பாந்தோதெனிக் அமிலம்)
வைட்டமின் பி6
வைட்டமின் பி7 (பயோட்டின்)
வைட்டமின் பி9 (ஃபோலேட் அல்லது ஃபோலிக் அமிலம்)
வைட்டமின் பி12
ALSO READ | நாக்கின் நிறமும் ஆரோக்கியமும்; ‘இந்த’ நிறங்கள் தீவிர நோயின் எச்சரிக்கை மணி!
வைட்டமின் B குறைபாட்டால் ஏற்படும் நோய்கள்
சில வகையான வைட்டமின் பி குறைபாடு மற்றவற்றை விட ஆபத்தானது என கூறப்படுகிறது.
உடலில் வைட்டமின் பி1 மற்றும் வைட்டமின் பி2 குறைபாட்டின் அறிகுறிகள்
இந்த இரண்டு வைட்டமின் பி குறைபாடு நரம்பு மண்டலம், தோல், கண்கள் போன்றவற்றை பாதிக்கிறது. இது இந்த உறுப்புகளை வலுவிழக்கச் செய்து வாயில் புண்கள் அல்லது கொப்புளங்களை ஏற்படுத்தும்.
ALSO READ | Kidney Health: சிறுநீரகத்தை டேமேஜ் செய்யும் இந்த '5' உணவுகளை தவிர்க்கலாமே..!!
வைட்டமின் பி1 மற்றும் வைட்டமின் பி2 நிறைந்த உணவுகள்:
முழு தானியங்கள், மீன், பருப்புகள், முட்டை, ப்ரோக்கோலி மற்றும் கீரை, குறைந்த கொழுப்புள்ள பால் போன்ற பச்சை காய்கறிகள்.
வைட்டமின் பி3 குறைபாட்டின் அறிகுறிகள்:
குழப்பம், வாந்தி, சோர்வு, மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு, நாவின் அடர் சிவப்பு நிறம், கரடுமுரடான தோல், செரிமானம் பாதிப்பு, குமட்டல், வயிற்றுப் பிடிப்பு போன்றவை.
வைட்டமின் பி3 நிறைந்த உணவுகள்:
வேர்க்கடலை, இறைச்சி, மீன் போன்றவை.
உடலில் வைட்டமின் பி9 குறைபாட்டால் ஏற்படும் நோய்கள்:
சோர்வு, கவனம் இல்லாமை, எரிச்சல், வேகமான இதயத் துடிப்பு அல்லது பதட்டம், மூச்சுத் திணறல், மெகாலோபிளாஸ்டிக் அனீமியா, தோல்-முடி-நகம் நிறத்தில் மாற்றங்கள் போன்றவை.
வைட்டமின் பி9 நிறைந்த உணவுகள்:
கீரை, ஆரஞ்சு, வேர்க்கடலை, ராஜ்மா, பட்டாணி போன்றவை.
உடலில் வைட்டமின் பி6 குறைபாட்டின் அறிகுறிகள்
மனச்சோர்வு, குழப்பம், குமட்டல், இரத்த சோகை, அடிக்கடி தொற்று ஏற்படுதல், தோல் வெடிப்பு அல்லது தோல் அழற்சி போன்றவை.
வைட்டமின் பி6 நிறைந்த உணவுகள்:
உருளைக்கிழங்கு மற்றும் மாவுச்சத்துள்ள காய்கறிகள், சிட்ரஸ் மற்றும் பிற பழங்கள், மீன் போன்றவை.
உடலில் வைட்டமின் பி12 குறைபாட்டால் ஏற்படும் நோய்கள்
சோர்வு, பலவீனம், மலச்சிக்கல், பசியின்மை, திடீர் எடை இழப்பு, கை கால்களில் உணர்வின்மை, பலவீனமான நினைவாற்றல், வாய் மற்றும் நாக்கில் வீக்கம் போன்றவை.
வைட்டமின் பி12 நிறைந்த உணவுகள்:
முட்டை, தாவர பால், பால், பாலாடைக்கட்டி, மீன், கோழி போன்றவை.
(பொறுப்புத் துறப்பு: இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன. ZEE NEWS இவற்றை அங்கீகரிக்கவோ உறுதிப்படுத்தவோ இல்லை.)
ALSO READ | Omicron: ஒமிக்ரானில் இருந்து காக்கும் ‘5’ எளிய ஆயுர்வேத நடைமுறைகள்..!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR