LDL என்னும் கெட்ட கொலஸ்ட்ராலை ஒழித்து கட்ட உதவும்... மேஜிக் மசாலா!

Magic Masala To control Bad Cholesterol: நம் உடலில் இரண்டு வகையான கொலஸ்ட்ரால் உள்ளது, ஒன்று HDL என்னும் நல்ல கொலஸ்ட்ரால். இது இதய ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது. மற்றொன்று LDL என்னும் கெட்ட கொலஸ்ட்ரால். இது நரம்புகளில் அடைப்பை ஏற்படுத்தி விடும். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 18, 2024, 06:02 PM IST
  • உடலில் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்கும் போது, ​​அது நரம்புகளில் அடைப்பை ஏற்படுத்தி விடும்.
  • மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற கடுமையான நோய்களின் ஆபத்து அதிகமாகும்.
  • சில வீட்டு வைத்தியங்களும் கொலஸ்ட்ராலைக் குறைக்க கை கொடுக்கும்.
LDL என்னும் கெட்ட கொலஸ்ட்ராலை ஒழித்து கட்ட உதவும்... மேஜிக் மசாலா! title=

கெட்ட கொலஸ்ட்ராலை ஒழித்து கட்ட: தவறான உணவுப் பழக்கவழக்கங்களாலும், மோசமான வாழ்க்கை முறையாலும், தற்போது பலருக்கு கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளது. இதனால், பல நாள்பட்ட நோய்களுக்கு ஆளாகும் நிலைமை உள்ளது. நம் உடலில் இரண்டு வகையான கொலஸ்ட்ரால் உள்ளது, ஒன்று HDL என்னும் நல்ல கொலஸ்ட்ரால். இது இதய ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது. மற்றொன்று LDL என்னும் கெட்ட கொலஸ்ட்ரால். உடலில் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்கும் போது, ​​அது நரம்புகளில் அடைப்பை ஏற்படுத்தி விடும். இதன் காரணமாக, உயர் இரத்த அழுத்தம், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற கடுமையான நோய்களின் ஆபத்து அதிகமாகும். உடலில் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்துவது அவசியமாகிறது. மருந்துகள் மற்றும் சரியான உணவுப் பழக்கவழக்கங்கள் மூலம் இதனை சாத்தியமாக்கலாம். இது தவிர, சில வீட்டு வைத்தியங்களும் கொலஸ்ட்ராலைக் குறைக்க கை கொடுக்கும். 

நாம் சமையலில் அன்றாடம் பயன்படுத்தும் சில மசாலாப் பொருட்கள் பல மருத்துவ குணங்கள் நிறைந்தவை. இவற்றில் சில உடலில் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்த உதவும். அவற்றில் இலவங்கப்பட்டையும் அடங்கும். கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த இலவங்கப்பட்டை எவ்வாறு எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதையும், அதை எவ்வாறு உட்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும் என்பதையும் அறிந்து கொள்வோம்.

கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும் இலவங்கப்பட்டை 

இலவங்கப்பட்டை சமையலுக்கு மணமும், சுவையும் சேர்க்கும் மசாலாப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், ஆரோக்கியத்திற்கும் பல நன்மைகளை அள்ளி வழங்குகிறது. இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் இருப்பதால், உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைத்ப்பதோடு, நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்க உதவுகிறது. இதனால், LDL என்னும் கெட்ட கொல்ஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைடுகளின் அளவைக் குறைக்க உதவுகிறது. அதுமட்டுமின்றி, உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கவும் பெரிதும் உதவும்.

கொலஸ்ட்ராலை குறைக்க இலவங்கப்பட்டையை உட்கொள்ளும் சரியான முறை

இலவங்கபட்டையை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம், ஆரோக்கிய நன்மைகளை பெறாஅம் என்றாலும், அதனை வீட்டு வைத்தியமாக பயன்படுத்தும் போது, முறையாக உட்கொண்டால், முழு பலனை பெறலாம். அந்த வகையில், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க இலவங்கப்பட்டை டீயை அருமருந்தாக இருக்கும். இதனை கலையில் வெறும் வயிற்றில் குடிப்பது மிகவும் நல்லது. ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒன்று அல்லது இரண்டு இலவங்கப்பட்டை துண்டுகள் அல்லது ஒரு ஸ்பூன் இலவங்கப்பட்டை தூள் சேர்த்து, சுமார் 5 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். அதன் பின் வடிகட்டி அதனுடன் சிறிது தேன் சேர்த்து பருகுவது சிறந்த பலன் கொடுக்கும் . அதுமட்டுமின்றி, ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவையும், உடல் எடையையும் கட்டுக்குள் வைக்க மிகவும் உதவும்.

அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு

இலவங்கப்பட்டையை உட்கொள்வது நன்மை பயக்கும் என்றாலும், அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை மறக்கக் கூடாது. அதை எப்போதும் குறைந்த அளவிலேயே உட்கொள்ள வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். முக்கியமாக, உங்களுக்கு ஏதேனும் கடுமையான நோய் அல்லது உடல் நல பாதிப்பு இருந்தால், அதை உட்கொள்ளும் முன் மருத்துவ நிபுணர் அல்லது உணவியல் நிபுணரின் ஆலோசனையைப் பெற வேண்டும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

Trending News