டிரெட்மில் வாக்கிங் vs அவுட்டோர் வாக்கிங்: ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நடைப்பயிற்சி மிக அவசியம். வாக்கிங் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தருவதோடு மட்டுமல்லாமல், மனதிற்கு ஒரு புத்துணர்ச்சியை அள்ளித் தரக் கூடியது. நடைபயிற்சிக்கு எந்த உபகரணமும் தேவையில்லை தான். ஆனால் மாறிவரும் சூழலில் வசதிகள் அதிகரித்து விட்டது. தற்போது பெரும்பாலான மக்கள் நடைபயிற்சிக்கு டிரெட்மில்களின் உதவியை நாடுகிறார்கள். சில ஜிம் சென்று ட்ரெட்மில்லில் பயிற்சி செய்கின்றனர். சிலர் தங்களது வீட்டிலேயே, ட்ரெட் மில் வைத்திருக்கிறார்கள்.
மாறி வரும் இந்த சூழ்நிலையில், திறந்தவெளியில் நடப்பது சிறந்ததா அல்லது டிரெட்மில்லில் நடப்பது சிறந்ததா என்பது பலர் மனதில் எழும் முக்கிய கேள்வியாக உள்ளது. ஆரோக்கியத்திற்கு அதிக கொடுப்பது எது என்பதை அறிந்து கொள்ள பலர் விரும்புகிறார்கள்.
டிரெட்மில் வாக்கிங் vs அவுட்டோர் வாக்கிங்
சாதாரண நடைப்பயிற்சி மற்றும் டிரெட்மில்லில் நடப்பது இரண்டிலும் உடல் செயல்பாடுகள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானவை. இருப்பினும், சில விஷயங்களில் அடிப்படை வேறுபாடு உள்ளது. திறந்த வெளியில் அல்லது பூங்காவில் நடக்கும்போது, காற்றின் அழுத்தத்துடன் நீங்கள் முன்னேறுவீர்கள். காற்றழுத்தம் உடலில் விழும்போது, அதிக சக்தி தேவைப்படுகிறது. அதே நேரத்தில், டிரெட்மில்லில் காற்று அழுத்தம் இருக்காது. அதோடு மிக வசதியான தட்பநிலை மற்றும் சூழல் இருக்கும். எனவே, திறந்த வெளியில் மேற்கொள்ளும், சாதாரண நடைபயிற்சி எடையைக் குறைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனினும் மூட்டு வலி பிரச்சனை உள்ளவர்களுக்கு ட்ரெட்மில் வாக்கிங் (Health Tips) பயனுள்ளதாக இருக்கும்.
வெளியில் நடப்பதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்
திறந்த வெளியில் நடப்பது அல்லது பூங்காவில் நடப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். திறந்த வெளியில் நடக்கும் போது, இயற்கையில் அம்சங்களான் மரங்கள், செடிகள், பாதைகள், விலங்குகள் மற்றும் பறவைகள் போன்றவற்றின் அனுபவமும் கிடைக்கிறது. பாதங்களுக்கு ஏற்ற தாழ்வுகள் கொண்ட பாதையினால், கிடைக்கும் அழுத்தமும் மாறுபடும். இது டிரெட்மில்லில் நடக்காது. இங்கு ஒரே ஒரு வகை இயக்கம் மட்டுமே இருக்கும். ஆனால் சாதாரண நடைபயிற்சியில் உடலின் பெரும்பாலான தசைகளுக்கு வேலை கிடைக்கிறது. இதனால், கூடுதல் கலோரிகள் எரிக்கப்படும்.
மேலும் படிக்க | 21 நாள் நோ சுகர் சேலஞ்சுக்கு ரெடியா? இதனால் கிடைக்கும் எக்கச்சக்க நன்மைகள்
ட்ரெட்மில் நடைபயிற்சி யாருக்கு உகந்தது
நிச்சயமாக டிரெட்மில் மூட்டுவலி இருப்பவர்களுக்கு சிறந்தது, ஏனெனில் இது மூட்டுகளுக்கு அதிர்ச்சி ஏற்படாமல் பாதுகாக்கிறது. சாதாரண நடைபயிற்சியின் போது ஏற்படும் சிறிய மற்றும் பெரிய அதிர்ச்சிகள் மூட்டுகள் மற்றும் கணுக்கால்களை பாதிக்கலாம். சாதாரன முறையில் வாக்கிங் செய்யும் போது, பாதையில் காணப்படும் ஏற்றத் தாழ்வுகள் காரணமாக ஏற்படும் அதிர்ச்சிகள் நேரடியாக மூட்டுகளில் விழுவதால், மூட்டு வலி இருப்பவர்களுக்கு இதனால் பிரச்சனைகளை அதிகரிக்கும்.
நடைபயிற்சியினால் கிடைக்கும் நன்மைகள்
ட்ரெட்மில் நடைபயிற்சி அல்லது வழக்கமான நடைபயிற்சி எதுவாக இருந்தாலும், உடல் பருமனை குறைப்பதோடு, இதய நோய், பக்கவாதம், உயர் இரத்த அழுத்தம், புற்றுநோய் மற்றும் வகை 2 நீரிழிவு அபாயத்தையும் பெருமளவில் குறைக்கும். அதனால், உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம், நடைபயிற்சி அல்லது ஜாகிங் என உங்களுக்கு ஏற்ற வகையிலான பயிற்சியை தொடர்ந்து மேற்கொள்ளுங்கள்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | Pancreas Health: டயட்டில் ‘இவற்றை’ சேருங்கள்... உங்கள் கணையம் தாங்க்யூ சொல்லும்..!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ