Christmas 2024 Last Minute Gift Ideas : இந்த ஆண்டின் கிறிஸ்துமஸ் வந்தாச்சு. இன்னும் சில நாட்களில் கொண்டாடப்படும் இந்த பண்டிகையை பலர் பரிசு கொடுத்து கொண்டாடுவர். அப்படி நீங்கள் கடைசி நிமிடத்திலும் உங்கள் பட்ஜெட்டிற்குள் அடங்கும் பொருட்களை கொடுத்து அசத்தலாம். அவை என்ன தெரியுமா?
Christmas 2024 Last Minute Gift Ideas : கிறிஸ்துமஸ் பண்டிகை, இந்தியாவில் பலரால் விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகைகளுள் ஒன்றாகும். இந்த பண்டிகயின் போது பலர் தங்கள் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் கிஃப்ட் கொடுத்து கொண்டாடுவது வழக்கம். ஆனால், பலருக்கு கடைக்கு சென்று கிஃப்ட் வாங்க நேரம் இல்லாமல் இருக்கும். அவர்கள், கடைசி நேரத்தில் எந்த மாதிரியான பரிசுகளை தேர்ந்தெடுக்கலாம் என்பது குறித்து இங்கு பார்க்கலாமா?
பூங்கொத்து: பூக்கள் என்றால் யாருக்குதான் பிடிக்காது? நீங்கள் பரிசு கொடுக்க நினைக்கும் நபருக்கு என்னென்ன பூக்கள் பிடிக்குமோ அதை ஒரு பூங்கொத்தாக செய்து கொடுக்கலாம். அல்லது அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட சாக்லெட் பிடிக்கும் என்றால், அந்த பூங்கொத்திற்கு நடுவே சாக்லெட்டுகளையும் வைக்கலாம்.
நன்கொடை: நீங்கள் கிஃப்ட் கொடுக்க நினைக்கும் நபர், பிறருக்கு உதவி செய்ய விரும்புபவராக இருந்தால் அவரது பெயரில் ஏதேனும் ஒரு தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடை அளிக்கலாம்.
டிஜிட்டல் பரிசுகள்: அவர்களுக்கு பிடித்த பாடல்களை வைத்து ஒரு ப்ளே லிஸ்டை கிரியேட் செய்து, அல்லது அவர்களது போட்டோக்களை ஸ்லைட் ஷோவாக அதை வீடியோ பதிவாக கொடுக்கலாம்.
இ-புத்தகங்கள்: உங்களுக்கு பிடித்த நபருக்கு புத்தகங்கள் படிக்க பிடிக்கும் என்றால், அவர்களுக்கு இ-புத்தகங்களை பரிசாக கொடுக்கலாம். அல்லது, ஆடியோ புத்தகங்களையும் ஆன்லைன் வழியாக பரிசளிக்கலாம்.
பரிசு கூடைகள்: நீங்கள் பரிசு கொடுக்க நினைக்கும் நபருக்கு பிடித்த ஸ்நாக்ஸ், அழகு பொருட்கள், பயணம் செய்யும் போது தேவைப்படும் பொருட்கள் ஆகியவற்றை சேர்த்து இந்த பரிசை வழங்கலாம்.
ஓடிடி தளங்களின் சப்ஸ்கிரிப்ஷன்: நீங்கள் பரிசு கொடுக்க விரும்பும் நபர் படம் அல்லது தொடர்கள் வாங்க விரும்புபவராக இருந்தால் நெட்ஃப்ளிக்ஸ், டிஸ்னி +, அமேசான் ப்ரைம் உள்ளிட்ட ஏதேனும் தளத்தின் சந்தாவை நீங்கள் செலுத்தி, அவர்களுக்கு பரிசளிக்கலாம்.
கார்டுகள்: ஆதி காலத்தில் இருந்து இப்போது வரை அழியாமல் இருக்கும் பரிசுகளுள் ஒன்று இது. இது போன்ற ஒரு கார்டை வாங்கி அதில் உங்களுக்கு தோன்றும் கவிதை அல்லது அவர்கள் குறித்த நல்ல விஷயங்களை எழுதி பரிசளிக்கலாம்.